சினிமா

பொன்னியின் செல்வன் பாடல்கள் வெளியீடு ! பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டிரெய்லர் வெளியாகும் நேரம் இதுதான் !

AR Rahman Ponniyin Selvan

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் பாகம் 1. கல்கி எழுதிய நூலை தழுவி மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் திரைக்கதை அமைத்து அதை படமாக்கியுள்ளனர். வழக்கம் போல இயக்குனர் மணிரத்னம் இசை துறைக்கு ஏ.ஆர்.ரஹ்மானையே தேர்வு செய்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஷ்வர்யா லக்ஷ்மி, பார்த்திபன், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர் என ஓர் நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

5 மொழிகளில் வெளியாகும் மணிரத்னம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வனுக்கு இந்திய சினிமாவே காத்திருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது. சென்ற மாதம் வெளியான டீஸர் மற்றும் இரு பாடல்கள் அமோக வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று ( செப்டம்பர் 6 ) சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமான இசை/டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

பொன்னியின் செல்வன் ஆல்பம்

சுமார் 6 மணி அளவில் பொன்னியின் செல்வன் படத்தின் மீதி 4 பாடல்கள் இணையதளத்தில் வெளியானது. ‘ சொல் ‘, ‘ அலைகடல் ‘, ‘ தேவராளன் ஆட்டம் ‘, ‘ ராட்சஸ மாமனே ‘ என வெளியான அனைத்து பாடல்களும் பிரமாதம். அதிலும் தேவராளன் ஆட்டம் மற்றும் சொல் பாட்டின் இசை மிகச் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ரஹ்மான் என்றால் ரஹ்மான் தான் !

நான்கு தினங்களுக்கு முன்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் மற்ற பாடல்களை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களில் அது தான் டிரென்டிங்காக இருந்தது. தற்போது அவ்விடத்தை பொன்னியின் செல்வன் ஆல்பம் ஆக்கிரமிக்கிறது. படம் மட்டும் தான் மாறியுள்ளது ! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அதே உச்சியில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Advertisement

பொன்னியின் செல்வன் டிரெய்லர்

லைகா நிறுவனம் புரொமோஷன் வேளைகளில் தீவிரமாக உள்ளது. படத்தைப் போலவே டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஜாம்பவான் கலைஞர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். தமிழ் சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை சிறப்பிக்க ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் வருகை தந்துள்ளனர். படத்தின் டிரெய்லர் 9 மணி அளவில் நிகழ்ச்சியில் திரையிடப்படும். அதன் பின்னரே யூடியூப்பில் வெளியாகும். மேலும் இந்த நிகழ்ச்சியை நேரில் சென்று கண்டு களிக்க இயலாதவர்கள் யூடியூப்பில் நேரடியாக காணலாம்.

செப்டம்பர் 30ஆம் தேதி சோழர்கள் வருகிறார்கள். இப்படம் மாபெரும் வெற்றியை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை. திரைப்படம் வெளியான மறுதினத்தில் இருந்து 5 நாட்கள் பூஜை விடுமுறை என்பதால் முதல் வாரத்திலேயே பெருவாரியான லாபத்தை ஈட்ட இயலும். இந்த படத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படமும் வெளியாகிறது. இந்த படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் எந்த படம் வெற்றி வாகை சூடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top