சினிமா

RRR படத்தின் வசூலை முந்திய பொன்னியின் செல்வன் ; மூன்றே நாளில் 200+ கோடிகள் ! அமெரிக்காவில் அபார சாதனை !

RRR and Ponniyin Selvan

இந்திய சினிமாவின் பெருமையான மணி ரத்னத்தின் பொன்னியின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அபார ஓப்பனிங்கை பெற்றுள்ளது. கல்கியின் வரலாற்று நாவலை தழுவி அதற்கு மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் அருமையான திரைக்கதை வடிவமைக்க வசனங்களில் ஜெயமோகன் தன் எழுத்துக்களால் கூடுதல் பலம் கொடுத்துள்ளார். இசையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் போல் பிரித்து மேய்ந்துள்ளார்.

நடிப்பு பட்டாளமே அடங்கி இருக்கும் இந்த படத்தில் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளனர். முதல் நாள் படம் பார்த்த பார்வையாளர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்தது. அமோக வரவேற்பை தொடர்ந்து விடுமுறை தினங்களில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கின்றனர் பலர்.

Advertisement

70 ஆண்டுகள் பழமையான இந்த நாவல் மிகவும் பெருமை வாய்ந்தது. வயதானோர் முதல் இந்நூற்றாண்டு இளைஞனர்கள் வரை தலைசிறந்து நிற்கிறது. இந்த நாவலைப் படித்தவர்கள் அவர்கள் கற்பனை செய்ததைத் திரையில் காண வேண்டுமென்ற ஆசையில் விரைகின்றன்ர

இதனால் நினைத்ததை விட படம் அதிக வசூலை பெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் நாள் 27 கோடிகள் ஈன்ற பொன்னியின் செல்வன் உலகெங்கும் 80+ கோடிகள் அள்ளியது. இரண்டாம் நாளில் மொத்த வசூல் 150+ கோடிகளாக உயர்ந்தது. காந்தி ஜெயந்தியான நேற்று வசூல் இன்னும் சூடு பிடித்தது. மூன்று நாள் முடிவில் உலகம் முழுவதும் 230+ கோடிகள் வசூலாகியுள்ளது.

Advertisement

பிரான்ஸ் நாட்டில் ஆர்.ஆர்.ஆர் படத்தை முந்தி அடுத்து விக்ரம் படத்தை தாண்ட காத்திருக்கிறது. அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றுள்ளது. அமெரிக்காவில் இந்த வசூல் சாதனையை படைத்த முதல் ரஜினி அல்லாத படம் இதுதான். ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் மேலும் பல சாதனைகள் படைத்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறைகள் அடுத்து வருவதால் 500+ கோடிகள் கடந்து லாபத்தில் கால் வைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top