சினிமா

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் எப்படி இருக்கு..? விமர்சனம் இதோ

Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழக சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கல்கியின் வரலாற்று நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் இந்த படத்தை இயக்க , ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ,பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

இந்த நிலையில் திரைப்படத்தின் பொன்னி நதி என்ற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது .ஏ ஆர் ரகுமான் தமிழில் இந்த பாட்டை பாடியிருக்கிறார். எப்போதும் மணிரத்தினம் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் வைரமுத்து தான் இடம்பெறுவார்.ஆனால் இம்முறை மீ டூ பிரச்சனை காரணமாக அவருக்கு பதிலாக இளங்கோ கிருஷ்ணன் என்ற பாடல் ஆசிரியர் இந்த பாட்டை எழுதி இருக்கிறார். புது கூட்டணி என்பதால் பாடல் வரிகள் சற்று ஒட்டாத போல் தோன்றுகிறது.

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் எப்போதும் கேட்டவுடனே பிடிக்காது, கேட்க தான் பிடிக்கும் என்ற விமர்சனம் கூறப்படுவது வழக்கம். பொன்னி நதி பாடலும் அதே வரிசையில் தான் இடம் பிடித்திருக்கிறது. இந்த பாடல் கேட்க கேட்க தான் பிடிக்கும் என்ற ரகத்தில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏ ஆர் ரகுமானின் குரல் இந்த பாடலுக்கு ஒத்துவரவில்லை என்றும் ஒரு சில ரசிகர்கள் விமர்சித்துள்ளனர் .

Advertisement

அதற்கு காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் பண்டைய காலத்தில் நடைபெறும் கதை என்பதால் ரஹ்மானின் குரல் ஒத்துவரவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .அதே வேளையில் கன்னடத்தில் இந்த பாடலை பாடியிருக்கும் நகுல் அபாயங்கரின் குரல் சிறப்பாக இருப்பதாகவும், பேசாமல் தமிழில் அவரே பாடி இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மொத்தத்தில் பொன்னி நதி பாடல் கலவையான விமர்சனத்தையே ரசிகர்களிடையே பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான பிரமோஷன் பணியை பட குழு தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top