பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழக திரைப்பட வரலாற்றில் அதிக பொருள் செல்வி உருவாகி இருக்கிறது . இந்த படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரம் , கார்த்தி ,ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். 1950 ஆம் ஆண்டு கல்கி வார இதழில் வெளியான வரலாற்றுத் தொடர்கிறையே மையமாக வைத்து இந்த படம் இயக்குனர் மணிரத்தினத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி, கே ஜி எஃப் 2 ,ஆர் ஆர் ஆர் வரிசையில் தமிழ் சினிமாவில் இருந்து ஆயிரம் கோடி வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் படைக்கும் என தமிழக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தில் இளவரசர் அருள்மொழிவர்மன் ராஜராஜ சோழனாக பதவி ஏற்பதை தடுக்க நடத்தப்படும் காய் நகத்தலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது .ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரம், வந்திய தேவனாக நடிகர் கார்த்தி ,நந்தினியாக ஐஸ்வர்யா ராய், இளவரசி குந்தவையாக திரிசா உள்ளிட்டோர் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த நான்கு நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது .இந்த நிலையில் படத்தின் மைய கதாபாத்திரத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படக்குழு மெகா தவறை செய்துள்ளது .
நடிகர் ஜெயம் ரவியின் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தின் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது . இதில் ஜெயம் ரவி மிரட்டலான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் அருள்மொழிவர்மன் என்பதற்கு பதிலாக அருண்மொழிவர்மன் என்று தவறுதலாக பட குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ள நிலையில் படத்தின் மைய கதாபாத்திரத்தின் பெயரில் படக்குழு மெகா தவறை செய்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழ் இலக்கண விதிப்படி முதல் வார்த்தையில் இறுதியில் ‘ள்’என்ற எழுத்தும் அடுத்த வார்த்தையில் ‘ம’ என்று எழுதும் சேரும் போது அது அருண் என்று மருவிவிடும். அதனால் அருண்மொழி என்பதும் தவறில்லை. ஆனால் பெரும்பாலும் அருள்மொழி வர்மன் என்று அனைவரும் அழைப்பதால் இது ரசிகர்களுக்கு தவறாக தோன்றியுள்ளது.