Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூலில் சாதனை

பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூலில் சாதனை

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. தமிழக ரசிகர்கள் முதல் பாகத்தை போல், இரண்டாவது பாகத்திற்கும் நல்ல வரவேற்பை கொடுத்தனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் விமர்சனமும் பெரும்பாலும் பாசிட்டவாக அமைந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் திரைக்கதையில் தோய்வு இருந்தாலும், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரின் நடிப்பு அனைத்தையும் சரி செய்துவிட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்ப்டம் நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 16 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்துள்ளது. கேரளாவில் இரண்டரை கோடி ரூபாய் வசூல் பெற்ற பொன்னியின் செல்வன், ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 33 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது.

- Advertisement -

உலகம் முழுவதும் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தியது. இது 2023ஆம் ஆண்டு தென்னிந்திய அளவில் வெளியான படத்தில் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதன் மூலம் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு மற்றும் சிரஞ்சீவியின் வாட்டர் கீரையா போன்ற படங்களை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது.

எனினும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாளில்  80 கோடி ரூபாய் வசூல் படைத்திருந்தது. அதை வட குறைவு தான் என்றாலும், இரண்டாவது பாகத்திற்கு தற்போது நேற்றை விட இன்று கூட்டம் பெருமளவு வந்துள்ளது. இதனால் மே1 ஆம் தேதி வரை விடுமுறை என்பதால் பொன்னியன் செல்வன் திரைப்ப்டம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular