Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட விழா !

பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட விழா !

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் விக்ரம் , கார்த்தி ,ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராய், திரிஷா , சரத்குமார், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . தமிழ் சினிமாவின் வரலாற்றிலே அதிக பட்ஜெட் கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலையை தயாரிப்பு நிறுவனமான லைக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.

- Advertisement -

முதலில் சோழன் வருகிறான் என்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் பிறகு நடிகர் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டது. அதில் நடிகர் விக்ரம்க்கு போர் செய்வதில் வல்லவன் என்ற கதாபாத்திரத்தின் அம்சத்தை பட குழு குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகு நடிகர் கார்த்தியின் வந்தியதேவன் பரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதில் நாடு இல்லாத இளவரசன், உளவாளி ,சாகச காரன் போன்ற கதாபாத்திரத்தின் அம்சத்தை பட குழு குறிப்பிட்டுள்ளது. தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் நந்தினி மகாராணி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் தோற்றத்தையும் பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டீசர் வரும் ஜூலை எட்டாம் தேதி சென்னையில் மிகப் பிரமாண்டமான விழாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி ,ஆகியோர் தங்களது கதாபாத்திர தோற்றத்திலே கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார் .

- Advertisement -

இந்த படத்தின் பாடலும் மிக விரைவில் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் நடப்பாண்டிலும் அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பாகுபலி , ஆர் ஆர் ஆர் , கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்கள் வரிசையில் தமிழகத்தில் இருந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Most Popular