சினிமா

பாகுபலியை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. அசர வைக்கும் தொழில் நுட்பத்தில் ரிலீஸ்.. டிரைலர் எப்போது தெரியுமா?

Jayam Ravi as arunmozhi varman in ponniyin selvan

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படம் எழுத்தாளர் கல்கி என்று சொல்லப்படும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்ற புராண கதையை கதைக்களமாகக் கொண்டது.இது சோழ நாட்டின் பெருமையை உணர்த்தக் கூடிய ஒரு படைப்பாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்திக்,விக்ரம்,சரத்குமார், பார்த்திபன், ஜெயராம்,ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி,பிரகாஷ் ராஜ், பிரபு, ரஹ்மான் என்று திரை உலகின் நட்சத்திர பட்டாளங்களை நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மேலும் ஒரு பெருமையாக அமைந்திருக்கிறது.

அண்மையில் முதன் முதலாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படத்தில் முதல் பாடலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் உடைய குரலிலேயே வெளியாகி இருந்தது .பொன்னின் நதி பார்க்கணுமே என்ற இந்தப் பாடல் ரசிகர்களிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றிய ஆர்வத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்தப் பாடலை தமிழ் வரிகளிலும் ஏ ஆர் ரகுமானின் உடைய குரல் மற்றும் இசையில் கேட்கும் பொழுது நம் சோழ மண்ணின் பெருமை ஒரு நிமிடம் கண் முன் வந்து நிற்பதை நம்மால் உணர முடிகிறது. அப்படிப்பட்ட இந்த படைப்பை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ஐ மேக்ஸ் என்று சொல்லப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், ஃபிலிம் பார்மட்டுகள், ஃபிலிம் ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரையரங்குகள் ஆகிய தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவர இருக்கிறது இதன் மூலம் தமிழக ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்ட துறையில் கண்டு களிக்க முடியும் . முதன் முதலில் தமிழ் படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனை ஒரு விழாவாக நடத்த படுக்கலும் முடிவு எடுத்துள்ளது இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கு பெறுவார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி உற்சாகத்தை தந்து மேலும் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top