சினிமா

லத்தியும் போச்சா? தொடர்ந்து 7 படங்களும் மண்ணை கவ்வியது.. சோகத்தில் விசால்!

தமிழ் சினிமாவில் புரட்சித் தளபதி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு தயாரிப்பாளர், நடிகர் என பல பரிமாணங்களை எடுத்தவர் நடிகர் விஷால். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எம்எல்ஏ தேர்தலிலும் போட்டியிட்டு வேட்பு மனு எடுக்கப்படாததால் அதில் மட்டும் நடிகர் விஷால் சரிக்கினார்.

Advertisement

இதேபோன்று நட்சத்திர கிரிக்கெட், நட்சத்திர விழா என பல்வேறு நிகழ்ச்சிகளையும் விஷால் நடத்தி தன்னை ஒரு லைம் லைட்டில் வைத்திருக்கிறார். ஆனால் விஷால் தான் ஒரு நடிகர் என்பதே மறக்கும் அளவுக்கு இப்படி சினிமாவுக்கு வெளியில் சுற்றி வந்தார். ஜார்ஜ் கோட்டை குறித்து கனவு கண்ட நடிகர் விஷால் பட ஸ்கிரிப்ட்ஐ தேர்வு செய்வதில் கோட்டை விட்டார். இதன் காரணமாக அவர் நடித்த கடைசி ஏழு படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தோல்வியை தழுவியது.

சண்டக்கோழி 2 ,அயோக்கியா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்து. இதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என கடும் உழைப்பை போட்டு லத்தி என்ற படத்தை விஷால் கதாநாயகனாக நடித்தார். இதில் 100 சதவீதம் உழைப்பை விஷால் போட்டாலும் மீண்டும் திரைக்கதையில் கவனம் செலுத்த கோட்டை விட்டார். இதன் காரணமாக இன்று வெளியான லத்தி படமும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

Advertisement

லத்தியுடன் ரீசாகி இருக்கும் கணக்கெட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் லத்தி தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். நடிகர் விஷால் கடைசியாக இரும்புத்திரை திரைப்படத்தில் ஒரு ஹிட்டு கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து ஏழு படங்கள் அவருக்கு மண்ணை கவ்வி இருக்கிறது. தற்போது விஷால் பெரிதும் நம்பியிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் அவரை காப்பாற்றுமா இல்லை அதுவும் சரிக்கிவிடுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top