சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இதில், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகிபாபு, வசந்த் ரவி, ஜாக்கி ஜரஃப் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரலாக, டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில், ஜெயிலர் திரைப்படத்திலிருந்து வெளியான டைகர்கா ஹூக்கும் திரைப்பட பாடல், பெரும் சர்ச்சையை கிளப்பியது. உன் அலம்பல் பாத்தவன், உன் அப்பன் விசில்ல கேட்டவன்-னு என பாடலில் இடம்பெற்ற அனைத்து வரிகளும், நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை காட்டுவதாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதே சமயம், நடிகர் விஜய்யை தாக்கிதான் இந்த வரிகள் எழுதப்பட்டிருப்பதாக சிலர் கூறினர்.
இப்படி பட்ட சூழலில், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பருந்து – காகம் கதையை கூறி பரபரக்க வைத்தார். காகம் நினைத்தாலும் பருந்து ஆக முடியாது என்று அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் இணையத்தில் நேரடியாக விஜய் – ரஜினி ரசிகர்கள் மோத ஆரம்பித்தனர். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று தளபதி ரசிகர்கள் கூற, நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினியே என்று தலைவர் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த ரேஸில் தற்போது அஜித்தும் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. பழைய வீடியோ ஒன்றி்ல் பேசிய அஜித், நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கெத்தாக கூறியிருக்கிறார். இந்த வீடியோவை தற்போது தூசி தட்டியுள்ள ஏ.கே. ரசிகர்கள், எங்க தலயும் களத்தில் இருக்கிறார் என்று கூறி வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் விஜய் – ரஜினி என சூடாக போய் கொண்டிருக்கும் களத்தில் , அஜித் ரசிகர்களும் வந்து இறங்கியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.