Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாதள்ளிப்போன தங்கலான் திரைப்படம் ..!வருகின்ற தேர்தலால் வறண்டு போன தமிழ் சினிமா..!

தள்ளிப்போன தங்கலான் திரைப்படம் ..!வருகின்ற தேர்தலால் வறண்டு போன தமிழ் சினிமா..!

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி இருக்கும் தங்களான் திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியிடுவதற்கு சரியான நாள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது.

- Advertisement -

ஒரு வழியாக ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வந்திருந்தது தற்பொழுது அதுவும் தள்ளிப் போக்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வருகின்ற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மக்கள் அனைவரும் தேர்தலில் தான் கவனம் செலுத்துவார்கள் அந்த சமயத்தில் நாட்டைப் பற்றிய கவலையில் மக்கள் இருப்பார்கள் அப்பொழுது யாரும் திரையரங்குகளை நோக்கி வருவது சற்றும் குறைவான விஷயம்தான்.

- Advertisement -

அதேபோல் அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டியும் நடக்க இருக்கிறது .பெரும்பாலான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் சமயத்தில் வேறு எதிலும் ஈடுபட மாட்டார்கள் .

- Advertisement -

இதுபோன்ற சமயத்தில் ஒரு பெரிய திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடுவது திரைப்படத்திற்கு சரியான நிலை அல்ல என்பதை கருத்தில் கொண்டு தங்களான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்
தனஞ்செயன் ஏப்ரல் மாதம் தேர்தல் முடிந்த பிறகு தங்களான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தற்பொழுது பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் ஏப்ரல் மாதமும் இந்த திரைப்படம் வெளியிடப்படாது என்பது போல் தெரிகிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

அதை தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு என பொது தேர்வுகளும் தொடங்கிவிடும் அந்த நாட்களிலும் திரைப்படங்கள் வெளியிட்டால் யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சந்தேகமான ஒன்றுதான் .அதனால் அந்த சமயத்திலும் தங்களால் திரைப்படம் வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

வருகின்ற ஏப்ரல் மாதம் எந்த திரைப்படம்மும்  திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக தெரியவில்லை. தமிழ் சினிமாவே  வறண்டு போய் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Most Popular