சினிமா

சலார் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பாகுபலியும், கேஜிஎப் இயக்குனரும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகம்

2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் ஒட்டு மொத்த திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த எஸ் எஸ் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பாகும். இந்தத் திரைப்படத்தில் பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். பாகுபலி என்ற அந்தப் பெயர் தனக்கென்று அமைந்தது போன்று ஒரு பொருத்தமான கதாபாத்திரமாக பிரபாஸிற்கு பாகுபலி திரைப்படம் அமைந்தது.எஸ் எஸ் ராஜமூலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகியது பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி 2 ஆயிரத்து 650 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்தது.

Advertisement

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபாஸ் தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக பிரபலமானார். இதைத்தொடர்ந்து வட இந்தியாவிலும் பெருமளவில் ரசிகர்கள் குவிந்தார்கள்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸுக்கு தெலுங்கில் சாஹோ,ராதே ஷ்யாம் என்று பல படங்கள் வெளி வந்தது.

தற்பொழுது இயக்குனர் உம்ராட்டுடைய இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஆடி புருஷ் என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இயக்கிய இராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது இந்தத் திரைப்படம் மகா சங்கராநிதி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Advertisement

தொடர்ந்து தற்பொழுது கேஜிஎப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் தெலுங்கில் சலார் என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாபாத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் ஜெகபதிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள் .இந்த திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த சலார் திரைப்படம் ஒரு ஆக்ஷன் ஃபிலிம் என்பதை அந்த போஸ்டர் குறிப்பிடுகிறது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பணமாக்கப்படுகிறது கே ஜி எஃப் இயக்குனரும் பாகுபலி பிரபாசம் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது பிரபாஸிற்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாவதால் பிரபாஸ் உடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top