Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஎந்த மகன் அதிகம் சம்பாதிக்கிறாங்களோ, அவங்களுக்கு தான் அம்மாவே மரியாதை தருவாங்க.. நடிகர் பிரபுதேவாவின் சகோதரர்...

எந்த மகன் அதிகம் சம்பாதிக்கிறாங்களோ, அவங்களுக்கு தான் அம்மாவே மரியாதை தருவாங்க.. நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாந்த் உருக்கம்..!

பிரபல நடிகர் பிரபுதேவாவின் சகோதரரான நாகேந்திரன் பிரசாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஒரு வீடியோவின் மூலம் வைரல் ஆகி வருகிறார்.

- Advertisement -

நடிகர் அர்ஜுன் நடித்த ரிதம் படத்தில் தனியே தன்னந்தனியே என்ற பாடலில் இவர் ஆடிய நடனம் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமானது இவரை குறிப்பிட்டாலே அந்த பாடல் தான் நினைவுக்கு வரும்.

ஆனால் இவர் அதற்குப் பிறகு அது போன்று எந்த ஒரு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெளிப்படவில்லை. தற்பொழுது ஒரு தனியார் youtube சேனலில் எடுக்கப்பட்ட பேட்டியில் அவர் பேசியது பேஸ்புக் போன்ற இணையத்தில் பரவி வருகிறது.

- Advertisement -

பணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு பணம் இருந்தால் தான் மதிப்பார்கள். எங்கள் வீட்டிலேயே பிரபு அண்ணாவிற்கு தான் மரியாதை அதிகம். அவருடைய பேச்சை தான் எங்கள் அம்மா கேட்பார். காரணம் எங்கள் குடும்பத்தில் அவர்தான் அதிகமாக சம்பாதிக்க கூடியவர்.

- Advertisement -

கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்று கூறுவார் ஆனால் அதுதான் உண்மை . இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு நான் கும்பிடும் சாமியும் என் தாய் சொல்லிக் கொடுத்த மந்திரங்களும் தான் அதிலிருந்து என்னை பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார் நாகேந்திர பிரசாந்த்.

அண்ணன், தம்பிகளை பற்றி கம்பேர் செய்து எத்தனையோ விஷயங்கள் பேசப்படும். அதில்  நீங்கள் ஏதாவது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு நானும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 5 வருடம் யூகேவில் இருந்தேன் அங்கும் எனக்கு தெரிந்த நடனத்தை வைத்து சம்பாதித்தேன் .

பின் கொலம்பியா பிச்சருக்கு லொகேஷன் மேனேஜராக பணியாற்றினேன். பத்து நாளில் உனக்கு திருமணம் வா என்று என் தாய் கூறியதும்  வந்து விட்டேன் அதன் பிறகு திரும்பி அங்கு செல்லவில்லை என்று கூறினார்

யூ கே வில் நிற வெறியர்கள் அதிகம் அதனால் நான் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் அங்கிருந்து வந்ததுக்கு  ஒரு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தால் நாகேந்திரன் பிரசாந்த்.

மேலும் நான் சென்ற அந்த வருடங்களில் இங்கு தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் உருவாகி  பிரபலமாகி விட்டார்கள் அவர் எடுத்துக்காட்டாக ஆரியா, ஜீவா போன்ற பிரபலங்களை குறிப்பிட்டிருந்தார். நான் அந்த சமயம் இங்கிருந்து சினிமாவிற்கு வந்திருந்தால் நானும் இன்று ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்பேன் என்று எனக்கு தோன்றுகிறது. யூகே சென்ற முடிவு தவறானது என்று நான் கருதுகிறேன்.

அதன் பிறகு என் தந்தையின் பெயரில் ஒரு டான்ஸ் கிளாசை  தொடங்கி நடத்தினேன். அதுதான் என் வாழ்வில் மீண்டும் என்னை புது மனிதனாக ஆக்கியது. அதேபோல் நானும் என்னுடைய இரண்டு அண்ணன்களும் அதிகமாக கடவுள் பக்தி உடையவர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திரன் பிரசாந்த்.

Most Popular