Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஸ்ருதி ஹாசனை பிரசாந்த் நீலுக்கு பயன்படுத்த தெரியவில்லை.. சலார் குறித்து குறை சொன்ன ராஜமவுலி

ஸ்ருதி ஹாசனை பிரசாந்த் நீலுக்கு பயன்படுத்த தெரியவில்லை.. சலார் குறித்து குறை சொன்ன ராஜமவுலி

கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்திய சினிமாவில் மிகப் பெரிய உயரத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் சாயலிலே பிரபாஸ், பிருதிவிராஜ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இன்று உலகெங்கும் வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

பல தோல்விப் படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். அவரது ரசிகர்கள் அனைவரும் இன்பக் கடலில் மிதக்கின்றனர். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி படத்தின் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி ஹாசன் அவர்களுக்கு ஐட்டம் பாடல் இல்லை என வருத்தமாக கூறினார்.

ராஜமவுலி, “ ஸ்ருதிஹாசன் நல்ல அசைவுகளை வெளிக்காட்டி நடனமாடக்கைடியவர். அவரது ரேஸ் குர்ரம், ஶ்ரீமந்துடு படங்களில் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார். நான் அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் தொலைகாட்சியில் அல்லது மொபைல் போனில் பார்ப்பேன். இயக்குனர் பிரசாந்த் நீல் ஸ்ருதி ஹாசனின் இந்தத் திறனை பயன்படுத்தி இருக்கலாம். ” என்றார்.

- Advertisement -

இதற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் கூறியதாவது, “ இந்தப் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். தேவையில்லாமல் பாடல்கள் சேர்க்க விரும்பவில்லை. அதனால் பார்வையாளர்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கும். ” பிரசாந்த் நீலின் முந்தைய படங்களிலும் தேவையில்லாமல் இது போன்ற பாடல்கள் இருக்காது.

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் வழக்கமாக ஐட்டம் பாடல்கள் அமைவது போலவே இது போன்ற அனைத்துப் பெரிய படங்களிலும் எதிர்பார்க்கிறார் போல ராஜமவுலி. சலார் படத்தின் விமர்சனங்களில் படி ஆக்க்ஷன் காட்சிகளுக்கு நிகராக கதாபாத்திரங்களுக்கு இடையே ஆழமான கதையைக் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே 3 மணி நேரம் கொண்ட இப்படத்தில் தேவையில்லாமல் பாடல்கள் சேர்த்தால் அது படத்தின் போக்கை கெடுத்துவிடும்.

பிரசாந்த் நீல் அதைச் செய்யாமல் இருந்தது நல்லது. முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியைப் பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விரைவில் பல்வேறு பாக்சஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்தவுள்ளது. முதல் பாகத்தின் தாக்கத்தில் தற்போது ரசிகர்கள் அனைவரும் சலார் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என காத்திருக்கிறார்கள்.

Most Popular