Monday, November 4, 2024
- Advertisement -
Homeசினிமாஇயக்குனர் மணிரத்னம் செய்த வேலையால் உயிரே திரைப்படத்தில் நடிக்க தயங்கினேன் மனம் திறந்து பேசிய ப்ரீத்தி...

இயக்குனர் மணிரத்னம் செய்த வேலையால் உயிரே திரைப்படத்தில் நடிக்க தயங்கினேன் மனம் திறந்து பேசிய ப்ரீத்தி ஜிந்தா

1998 இல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே திரைப்படம் என்றும் மறக்க முடியாத ஒரு காதல் காவியம் ஆகும்.

- Advertisement -

இதுவரை யாரும் சிந்திக்காத இதற்குப் பிறகும் யாரும் சிந்திக்க முடியாத ஒரு கதைக்களத்தை இயக்குனர் மணிரத்தினம் படமாக்கி இருக்கிறார் உயிரே ஒரு உயிர் பெற்ற காவியம் ஆகும்.

அந்தத் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானையும், நடிகை மனிஷா கொய்ரலாவையும்  சுற்றி அந்த கதை நகர்ந்தாலும் மனிஷா கொய்ராலாவை போல ப்ரீத்தி ஜிந்தா விற்கும் அந்த திரைப்படத்தில் முக்கியத்துவம் இருந்தது மறுக்க முடியாத ஒரு விஷயமாகும்.

- Advertisement -

அவருக்காக நெஞ்சினிலே என்ற பாடலையும் இயக்குனர் அந்த  திரைப்படத்தில் வைத்து அது வெற்றி பெற்றதே  அதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

- Advertisement -

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரீத்தி ஜிந்தா அந்த திரைப்படத்தில் நடந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். திரைப்படத்தில் நடிப்பதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு மணிரத்தினம் முன் வந்தபோது அவர் முகத்தை கழுவி வா என்று சிரித்த முகத்துடன் கூறினாராம்.

அதைக் கேட்ட பிரீத்தி ஜிந்தா முகத்தை கழுவினால் மேக்கப் போகி விடுமே என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். அவரும் மணிரத்தினம் கூறியதை விளையாட்டாக எடுத்துக் கொண்டிருக்கிறார்

ஆனால் கேமராமேன் மறுபடியும் ப்ரீத்தி ஜிந்தாவிடம் வந்து அவர் உண்மையைத்தான் கூறுகிறார் .நீங்கள் முகத்தை கழுவி விட்டு நடிக்க வாருங்கள் என்று கூறிய பிறகு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மேக்கப் இல்லாமல் நான் எப்படி நடிப்பேன் என்று தயங்கினேன் .

ஆனால் கேமரா மேன் சந்தோஷ் சிவனை பாராட்டியே ஆக வேண்டும் .என்னை மிக அழகாக திரைப்படத்தில் காட்டி இருந்தார் என்று ப்ரீத்தி ஜிந்தா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதைக் பார்த்து ரசிகர்கள் மேக்கப் போடாமலேயே ப்ரீத்தி ஜிந்தா அந்த திரைப்படத்தில் இவ்வளவு அழகாக இருந்தாரா என்று அதிர்ந்து போனார்கள். இவரே இதை சொல்லும் வரை யாரும் இதுவரை யுகித்திருக்க கூட முடியாது. அந்த அளவிற்கு அதில் அவர் அழகாக இருந்தார்.

Most Popular