Friday, September 13, 2024
- Advertisement -
Homeசினிமாவிபத்தில் சிக்கிய மலையாள சூப்பர் ஸ்டார் பிரித்வி ராஜ்..! மருத்துவர்கள் சொல்வது என்ன?

விபத்தில் சிக்கிய மலையாள சூப்பர் ஸ்டார் பிரித்வி ராஜ்..! மருத்துவர்கள் சொல்வது என்ன?

கேரளா சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் பிரித்திவிராஜ். பிரித்திவிராஜ் நடித்த பல படங்கள் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் நன்றாக ஓடும்.

- Advertisement -

மேலும் பாரிஜாதம், கனா கண்டேன், வெள்ளித்திரை, அற்புதத் தீவு, ராவணன், மொழி போன்ற தமிழ் படங்களிலும் பிரித்திவிராஜ் நடிப்பதால் அவருக்கு இன்னும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது விளையாட் புத்தா என்ற திரைப்படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் தீவிரமாக நடித்த வருகிறார்.

விபத்து

இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை டூப் இல்லாமல் பிரித்திவிராஜ் நடித்தார். அப்போது அவருடைய கால் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நடிகர் பிரித்திவிராஜ்க்கு முட்டி பகுதியில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

- Advertisement -

மருத்துவர்கள் விளக்கம்

இதன் காரணமாக மூன்று மாதம் வரை நடிகர் பிருத்திவிராஜ் எந்த திரைப்படத்திலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர்கள், பிரித்திவிராஜ்க்கு லேசான காயம் தான் என்றும் பயப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஆனால் மூன்று மாதம் காலம் கண்டிப்பாக பெட்ரெஸ்ட்டில் பிரித்திவிராஜ் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் பழையபடி இருக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் பிரித்திவிராஜ் நடிக்க வேண்டிய படங்கள் அனைத்தும் தள்ளிப் போய்விட்டது.

சலார்க்கு சிக்கல்

சலார் திரைப்படத்தில் பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சலார் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதனால் பிரித்திவிராஜ் சலார் திரைப்படத்தில் தொடர்வாரா இல்லையா என்ற எதிர்பார்த்து இறந்துள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் நடித்து ரிலீசாக காத்திருக்கும் ஆடி ஜீவிதம் திரைப்படமும் தள்ளிப் போகும் கூறப்படுகிறது.

இதனால் எவ்வித போட்டியும் இன்றி லியோ திரைப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பிரித்திவிராஜ் பூரண குணமடைந்து மீண்டு வரவேண்டும் என பல ரசிகர்களும் நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular