தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்று சுயநலக்காரர்களை பார்த்து மக்கள் மத்தியில் கூறும் வழக்கம் உண்டு. அதற்கு ஏற்றார் போல் அமைந்திருக்கிறது தயாரிப்பாளர்கள் தில்ராஜ் அவர்களின் செயல்.
இந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளராக அறிமுகமானார் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜ். தெலுங்கில் சினிமாவில் இவருக்கு என்று தனி அந்தஸ்து இருக்கிறது.
தெலுங்கு சினிமாவிற்கு செல்வாக்குள்ள தயாரிப்பாளரின் இவரும் ஒருவராவார் இப்படிப்பட்ட இவர் வாரிசு திரைப்படம் வெளியிடப்பட இருந்த போது அதிகமான தியேட்டர்களை வாரிசு திரைப்படத்திற்கு வேண்டும் என்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் அதாவது தமிழில் எடுக்கப்பட்ட வாரிசு திரைப்படம் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடுவதற்கு அங்கு உள்ள தியேட்டர்களையும் அதிகமாக புக் செய்து வெளியிட்டார் தயாரிப்பாளர் தில் ராஜ்.
அப்பொழுது பலரும் தமிழ் படத்திற்கு இவ்வளவு தியேட்டர்களை புக் செய்கிறீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் நினைத்தவாறு அதிக தியேட்டர்களில் தன்னுடைய வாரிசு திரைப்படத்தை வெளியிட்டு வெற்றியைக் கண்டார் தயாரிப்பாளர் தில்ராஜ்.
அதே தில்ராஜ் தற்பொழுது வருகின்ற தமிழ்நாட்டில் பொங்கலுக்கும் தெலுங்கானாவில் மகா சங்கராந்திக்கு என்று சொல்லப்படும் பண்டிகை நாட்களில் நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.இதே போன்று அயலான் திரைப்படமும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.
இதைப் பற்றி ஏபி அண்ட் டி ஜி யில் பேசும் பொழுது தயாரிப்பாளர்கள் ராஜ் தெலுங்கு திரைப்படங்களை வெளியிடுவதற்கு எங்களுக்கு தியேட்டர் பத்தவில்லை. இதில் எதற்காக இப்பொழுது டப் செய்த தமிழ் படங்களை எல்லாம் வெளியிட வேண்டும்.முதலில் தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தியேட்டர்களை புக் செய்த பின் மீதம் இருந்தால் தமிழ் திரைப்படங்களாக கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களுக்கு
திரையரங்கை கொடுப்போம் என்று அவர் கூறிய கருத்து பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தன்னுடைய திரைப்படத்தை வெளியிடுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு எல்லா தியேட்டர்களிலும் புக் செய்த தில் ராஜ் தற்பொழுது இப்படி பேசுவது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.