நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்தவர் இயக்குனர் அமீர். நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் என்று வரலாற்று போற்றும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் நடிகனாக அவரை உயர்த்தினார்.
இதேபோன்று நடிகர் சூர்யாவுக்கு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமா திரைப்பட துறையில் தனக்கென்று ஒரு பெயரை பெற்றுக்கொண்டார் அமீர். இந்த நிலையில் அண்மையில் நடந்த கார்த்திக் 25 நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா குடும்பத்துடன் தமக்கு பிரச்சினை இருப்பதாக வெளிப்படையாக அமீர் அறிவித்தார்.
இந்த நிலையில் அமீரின் இந்த பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ள ஞானவேல் ராஜா அமீர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதில் பருத்திவீரன் திரைப்படத்தின் போது இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் பட்ஜெட் என்று அமீர் கூறியதாகவும்
ஆனால் படம் முடியும் போது நான்கு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டதாகவும் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். மேலும் படத்தை அமீர் இரண்டு வருடத்திற்கு எடுத்ததாக குறிப்பிட்ட ஞானவேல் ராஜா படத்திற்கு கணக்கு கேட்டதற்கு பல தவறான கணக்குகளை அமீர் கூறியதாகவும் தெரிவித்தார்.
பருத்திவீரன் படத்திற்கு பயன்படுத்தப்பட்ட பன்றிகளில் 30 பன்றிகளை மட்டுமே திரையில் காட்டிவிட்டு 300 பன்றிகள் வாங்கப்பட்டதாக அமீர் கணக்கு காட்டியதாக ஞானவேல் ராஜா குறிப்பிட்டு இருக்கிறார்.
சரி 300 பன்றிகள் இல்லையே என்று கேட்டதற்கு சில பன்றிகள் செத்துவிட்டதாகவும் பல பன்றிகள் கேமராவில் காட்ட முடியவில்லை என்றும் அமீர் பொய் கணக்கு கூறியதாகவும் ஞானவேல் ராஜா சாடி இருக்கிறார்.
ராம் திரைப்படம் எடுக்கும் போது அமீர் கடனில் சிக்கிக் கொண்டதாகவும் அதிலிருந்து மீள்வதற்கு தாம் தான் பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்திற்காக இந்த படத்தை இயக்க அமீர் ஒப்பு கொண்டதாகவும் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார். ஏதோ கார்த்திக் இருக்கும் சூர்யாவிற்கும் அமீர் வாழ்க்கை கொடுத்தது போல் பேசி வருவதாகவும் உண்மையில் அமீருக்கு தான் இவர்கள் வாழ்க்கை கொடுத்தனர் என்றும் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்தார்.