சினிமா

பொன்னியின் செல்வனுடன் நானே வருவேன் படத்தை மோத வைப்பதற்கு காரணம் இதுதான் ! இமாலய நம்பிக்கையில் பேசும் கலைப்புலி எஸ்.தானு – வீடியோ இணைப்பு

Kalaipuli S Thanu about Naane Varuvean

செப்டம்பர் மாதம் சினிமா விரும்பிகளுக்கு தரமான படையல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் பல வெளியாகியுள்ளது மேலும் வெளியாகவுள்ளது. அதில் ஒன்று மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வன். மணிரத்னம் தலைமையில் விக்ரம், ஐஷ்வர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் பலர் என நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றிருக்கும் இப்படம் இம்மாத இறுதி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

பல நூறு கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அமோக எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட படத்துடன் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவரான கலைப்புலி எஸ்.தானு மோதுகிறார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை தயாரித்துள்ள தானு மிக தைரியமாக பொன்னியின் செல்வனுடன் மோதுகிறார்.

Advertisement

சமீபத்தில் வெளியான செய்தியில், நானே வருவேன் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும் நேரமின்மை காரணமாக சாம்பிள் காப்பியை திரையிட வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிரச்சினைகள் தாண்டியும் படத்தை செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் தயாரிப்பாளார். அதோடு அவர் படத்தின் மீது இமாலய நம்பிக்கையும் வைத்திருக்கிறார்.

யூடியூப் நேர்காணல் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தானு படத்தை அவசர அவசரமாக வெளியிடுவதைப் பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ தொடந்து 10 நாட்கள் விடுமுறை வரும் இந்த பண்டிகை நேரத்தில் படத்தை வெளியிடுவதே எனது முதல் குறிக்கோள். பண்டிகை காலத்தில் இன்னும் 2/3 படங்கள் கூட வெளியாகலாம் தப்பே இல்லை. மேலும் நான் அசுரன் படத்தை வெளியிட்ட இதே மாதத்தில் நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.” என்றார். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க ஏன் தாமதம் என்ற கேள்விக்கு, “ ஃபர்ஸ்ட் காப்பி வந்த பிறகே தேதியை அறிவிக்க திட்டமிட்டிருந்தோம். சென்சார் போர்டு வேலைகள் எல்லாம் முடிந்த உடனே அதை செய்துவிட்டோம். ” எனக் கூறினார் கலைப்புலி எஸ்.தானு.

Advertisement

நான்கு மணி காட்சிகள் இல்லாததற்கும் அவர் காரணத்தைக் கூறினார். “ எந்த படமாக இருந்தாலும் நான் நான்கு மணி காட்சிகளில் எனக்கு உடன்பாடில்லை. பல திரையரங்குகளில் அந்த வசதி இல்லை. கர்ணன் படத்தைக் கூட காலை 8 மணிக்கு தான் வெளியிட்டேன். மேலும் காலை 8 மணிக்கே பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் சரியாக போய் சேரும். ” என்றார். வெளிநாட்டு வியாபாரங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் நடிகர் தனுஷின் சினிமா கேரியரில் இந்தப் படத்தின் வியாபாரம் தான் அதிகமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தயாரிப்பாளருக்கு படத்தின் மீது அதீக நம்பிக்கை உள்ளது. திரையரங்குகள் பலவற்றில் பொன்னியின் செல்வன் காரணமாக இந்த படம் குறைந்த காட்சிகளையே பெறுகிறது. நல்ல விமர்சனம் வெளியானால் நிச்சயம் உயர்த்தப்படும். ஒரு வாரம் மேல் பண்டிகை விடுமுறை வரும் இந்த வேளையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் கலெக்ஷன் குவியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top