சிவகார்த்திகேயனின் கேரியரில் பல ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த அயலான் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு உலகெங்கும் வெளியாகிறது. ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இதில் ரகுல் பிரீத் சிங், வெங்கட் செங்குட்டுவன், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் குறைந்த ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் சற்று அதிகமாக வார்த்தைகளை விட்டுவிட்டார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.
அவர் சர்ச்சைக்குள்ளாகும் படி பேசியதாவது, “ அயலான் திரைப்படம் ஏற்கனவே பிளாக்பஸ்ட்டர் என எங்களுக்கு தெரியும், காரணம் நாங்கள் ஏலியனை அவ்வளவு நம்புகிறோம். மற்றவர்களைப் போல போதைப் பொருட்கள், பவுடர், இரத்தம் ஆகியவற்றை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. ” என்றார்.
அயலான் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களைக் குறிப்பிட்டு தான் அதைச் சொன்னார் என சமூக வலைத்தளத்தில் லோகேஷின் ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர். அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் லோகேஷ் கனகராஜை நேரடியாக தாக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது எனத் தெளிவாகத் தெரிகிறது.
ஒருவேளை அவர்களுக்கும் சண்டையாகவே இருந்தாலும் இது போல பொது வெளியில் மேடையில் ஒருவரை இழுவாகப் பேசுவது மிகவும் தவறு. லோகேஷ் கனகராஜ் ஸ்டைல் ஆக்க்ஷன் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதனால் அவரின் மேல் பொறாமை பட்டு அவரின் கலையை மட்டம் தட்டுவது கேவலமான காரியம்.
தன்னுடைய அடுத்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு இந்த செய்து போய் சேர்ந்தாலும் எதுவும் கண்டுகாமல் தன் வேலையை நோக்கி மட்டுமே செல்லுவார். மற்றொரு முறை ராஜேஷ் பேசும் போது சற்று யோசித்து பேசுவது நல்லது. அல்ல ரசிகர்கள் ஒரு காட்டு காட்டிவிடுவர்.