சினிமாவில் தற்போது மிகவும் சுமாரானா விமர்சனங்கள் பெற்றாலும் பெரிய நடிகர்கள் படம் என்றால் சுலபமாக 200 கோடிகளை அடிக்கிறது. ஆனால் சிறிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலே போட்ட பணத்தை விட கொஞ்சம் தான் லாபம் கிடைக்கும். இந்த நிலைமையில் தான் தற்போது நம் ஊரில் சினிமா இருக்கிறது.
இதனால் சிறிய படங்களை தயாரிக்க சிலர் யோசிக்கின்றனர். ஓடிடியில் விற்கவும் கடினமாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் அறிமுகத்திற்கு ஏங்கும் கலைஞர்களின் கனவு சிரமமாகிறது. இந்தத் தடைகளைத் தாண்டி வரும் சிறிய படங்களுக்குமே மிகவும் நல்ல விமர்சனமா கிடைத்தாலே தியேட்டரில் கூட்டம் கூடுகிறது.
பெரும்பாலான இப்போது எல்லோரும் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம், பெரிய படங்கள் சுமாராக இருந்தாலும் விசில் டான்ஸ் என சற்று பொழுது போக்கு கிடைக்கும் என்பதால் அதனை மட்டும் திரையரங்கில் பார்த்துவிடலாம் எனும் மன நிலையில் உள்ளனர். இது சிறிய படங்களுக்கு வர்த்தக ரீதியாக பெரிய அடியை வாங்கித் தருகிறது.
அடுத்தடுத்து பெரிய படங்கள் வரும் போது சின்ன படங்களுக்கு ஸ்கிரீன் தருவதில்லை எனும் குற்றச்சாட்டும் ஒரு பக்கம் இருக்கிறது. சின்னப் படங்களை பார்க்க மக்களை தியேட்டருக்கு இழுக்க தயாரிப்பாளர் கேயார் ஒரு முயற்சியைக் கையில் எடுத்துள்ளார். இவர் தயாரித்துள்ள காமெடி படம் ‘ ஆயிரம் பொற்காசுகள் ’ எனும் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம் எனும் ஆஃப்பரை அறிவித்தால் மக்கள் நிச்சயம் வருவர் என அவர் நினைக்கிறார். ஒரு வேளை இந்த முயற்சி வேலை செய்தால் அவருக்கு நல்ல லாபம் தான். அடுத்து வரும் சின்ன பட்ஜெட் படங்களும் இதே போல ஏதேனும் வழியைப் பின்பற்றி வெற்றியைக் காணலாம்.