Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாஅரசியலுக்கு வர்றீங்களே! டிக்கெட் விலையை குறைப்பீங்களா? விஜய்க்கு தயாரிப்பாளர் ராஜன் நறுக் கேள்வி

அரசியலுக்கு வர்றீங்களே! டிக்கெட் விலையை குறைப்பீங்களா? விஜய்க்கு தயாரிப்பாளர் ராஜன் நறுக் கேள்வி

தளபதி விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விழாவை நடத்தினார். அப்படி ஒரு விழாவை அவர் நடத்தியதை மக்கள் பெருமளவில் வரவேற்றார்கள். மேலும் இந்த விழாவில் சிறப்பம்சமாக தளபதி விஜய் மாணவர்களிடம் உரையாடினார்.

- Advertisement -

அந்த உரையில் அவர் அரசியலுக்கு வர போகிறார் என்று குறிப்பினை கூறியிருந்தார். ஏற்கனவே நீண்ட நாட்கள் ஆக தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். மேலும் தளபதி விஜய் ஒன்றும் கூறாத நிலையில் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பலரால் பல வதந்திகள் கிளப்பப்பட்டது.

தற்பொழுது வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு வெத்தலை பாக்கு கொடுத்தது போல் விஜய் உடைய உரையாடல் அமைந்துவிட்டது. திரும்பும் பக்கமெல்லாம் தளபதி விஜயின் அரசியல் வருகை எப்பொழுது என்று பேச்சு நடந்து வருகிறது. எல்லா பேட்டிகளிலும் செய்தியாளர்கள் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி வழக்கமாக்கி விட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் சலங்கை துரையின் இயக்கத்தில் கடத்தல் என்ற ஒரு திரைப்படம் வெளிவர இருக்கிறது. காத்தவராயன் கந்தர்வன் இபி கும் 302 போன்ற திரைப்படங்கள் தமிழில இயக்கியிருக்கிறார். தற்பொழுது இவர் இயக்கியிருக்கும் இந்த கடத்தல் திரைப்படத்தை தயாரிப்பாளர் கே ராஜன் தயாரித்திருக்கிறார்.

- Advertisement -

இது திரைப்படம் கே ராஜனுக்கு நீண்ட நாள் கழித்து இயக்கம் திரைப்படம் ஆகும். இந்தத் படத்தில் திரைப்படத்திற்கான பிரஸ்மீட் நடத்தப்பட்டது தயாரிப்பாளர் கே ராஜனிடம் தளபதி விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் லியோ திரைப்படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவை ஓரம் கட்டி விட்டு அரசியலில் தளபதி விஜய் ஈடுபடுவது சரியல்ல என்றும் தற்பொழுது திரையரங்குகளில் உரிமையாளர்கள் அரசிடம் டிக்கெட் விலையை உயர்த்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதால் வரக்கூடிய நாட்களில் டிக்கெட் 200 இல் இருந்து 400 ரூபாய் என்று உயர்த்தப்பட்டுவிடும். இதற்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதை பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள் என்ற செய்தி பரவி வருகிறது.

அதை சம்பந்தப்படுத்தி தயாரிப்பாளர் கே ராஜன் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கு முதல் நாள் ஆயிரம் ரூபாய் என டிக்கெட் விலை உயர்ந்து விட்டால் அரசியலுக்கு வரும் விஜயால் அதை தடுக்க முடியுமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

சினிமாவை ஓரம் கட்டும் அளவிற்கு தளபதி விஜய்க்கு வயதாகவில்லை அவர் ஒரு இளமையான நடிகர் தான் அவர் இன்னும் நடிக்கலாம் என்றும் கூறியிருந்தார் .

தன்னுடைய இந்த பதிலுக்கு பாதகம் எதுவும் விளைந்து விடக்கூடாது என்பதற்காக தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் அதை ஏற்படும் ஏற்காததும் மக்களுடைய முடிவு என்று கூறியிருந்தார்.

எப்படி அவர் கூறியதை தளபதி விஜய் எப்படி எடுத்துக் கொள்ளப் போவார் என்பது தெரியவில்லை. ஆனால் தளபதி ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் அவர்களின் விருப்பம் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான்.

Most Popular