Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவாடிவாசல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு

வாடிவாசல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு

- Advertisement -

நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்ற உள்ள திரைப்படம் தான் வாடிவாசல். ஜல்லிக்கட்டு தொடர்பான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எடுக்க உள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் சாதிய கொடுமைகளை கூறும் திரைப்படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்திற்காக சூர்யா காலை பயிற்சியில் எல்லாம் ஈடுபட்டார். இதற்காக சென்னையில் ஒரு நாள் படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்த நிலையில் திடீரென்று வாடிவாசல் திரைப்படம் நின்று போனது. அதேசமயம் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

சூர்யாவும் பாலாவுடன் அந்த சமயத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்தார். மேலும் சூர்யா பல்வேறு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். வெற்றிமாறனும் வாடிவாசல் குறித்து வாயை திறக்கவில்லை. இதனால் இந்த திரைப்படம் பாதியிலே நின்று விடுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சூர்யா பாலா படத்திலிருந்து பாதியில் விலகி தற்போது சூர்யா 42 என்ற மெகா பட்ஜெட் படத்தில் இயக்குனர் சிவா உடன் கைகோர்த்து நடித்து வருகிறார். வெற்றிமாறனும் விடுதலை படத்தில் பிசியாக இருந்தார். தற்போது இருவரும் தங்களது ப்ராஜெக்ட் முடித்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தானுவும் வாடிவாசல் திரைப்படம் குறித்து அனைவரும் எதிர்பார்த்த ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் வாடிவாசல் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு, தம்பி சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் படைப்பில் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல், ‘வாடிவாசல்.’

இந்த வருடத்திலேயே ரசிகர்களின் எண்ணம் நிறைவேறும். உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக ‘வாடிவாசல்’ அமையும் என்று கூறியுள்ளார்.
இதனை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வாடிவாசல் திரைப்படம் 1960களில் நடக்கும் கதையாக உருவாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular