தெலுங்கு திரைப்பட இயக்குனர் நாக அஸ்வினி இயக்கத்தில் ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படம் இயக்கப்பட்டு வருகிறது. இது இந்தியன் சயின்ஸ் மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் ஆகும் . இது திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் நாக அஸ்வின்:
இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஆன நாக அஸ்வின் இதற்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து இயக்கப்பட்ட மகாநதி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சாவித்திரியின் பயோகிராபி ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரிச்சையை பெற்றது.
தயாரிப்பு நிறுவனம்:
இந்த திரைப்படத்தை வைஜெயந்தி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஒயிட் ஜெயந்தி நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவின்போது திரைப்படம் இயக்கப் போவதான தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதற்குப் பிறகு கொரோனா காரணத்தினால் திரைப்படம் இயக்கப்படாமல் போகிவிட்டது. அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் செட்டில் திரைப்பட படப்பிடிப்பு தொடங்கியது.


விலை உயர்ந்த திரைப்படம்:
இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார்.நடிகர் பிரபாஸுடன் இணைந்து அமிர்தாபச்சன், தீபிகா படுகோன் ,திஷா பத்தாணி போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்தத் திரைப்படம் 800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் இது மிகவும் விலை உயர்ந்த திரைப்படமாகும். திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் இசையமைத்து வருகிறார் .
ஓம்ராத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபிருஷ் திரைப்படம் வெளியிடப்பட்டு எதிர்பார்த்த வெற்றி அடையாமல் மண்ணைக் கவியது. இதன் காரணத்தினால் இந்த திரைப்படத்தின் மீது நடிகர் பிரபாஸுக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது.


வில்லனாக உலக நாயகன்:
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த திரைப்படத்திற்கு கூடுதலாக சுவாரசியத்தை தரும் வகையில் திரைப்படத்தின் வில்லனாக உலகநாயகன் கமலஹாசன் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமலஹாசன் இயக்குனர் சங்கருடன் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் சேதுபதி என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. இந்த நாட்களுக்குப் பிறகு சேதுபதி என்ற கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமலஹாசனை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
பொங்கல் ரிலீஸ்:
மேலும் நடிகர் கமலஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படமும் கமலஹாசன் வில்லனாக நடித்திருக்கும் ப்ராஜெக்ட் என்ற திரைப்படமும் ஒரே நாளில் வெளியிட போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் வருகின்ற பொங்கலுக்கு வெளியிடப் போவதாக கூறப்படுகிறது கமலஹாசன் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மோத போகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ப்ராஜெக்ட் கேப் படத்திலிருந்து கமல்ஹாசன் விலங்கலாம் என்றும் கூறப்படுகிறது.