Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாபுரோஜக்ட் கே படத்தின் பெயர் மாற்றம்.. ஹாலிவுட் படம் அப்படியே காப்பி

புரோஜக்ட் கே படத்தின் பெயர் மாற்றம்.. ஹாலிவுட் படம் அப்படியே காப்பி

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிய பிரபாஸ். தற்போது தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது.

- Advertisement -

கடைசியாக அவர் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பிரபாஸ் சலார் என்ற திரைப்படத்தையே நம்பி இருக்கிறார். இதற்கு காரணம் அந்த படம் கே.ஜி.எப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குவது தான். இந்த நிலையில் பிரபாஸ் உடைய அடுத்த திரைப்படம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சம்பவமாக நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன்,தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் படத்தின் சில காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டது.
இது ஹாலிவுட் படமான டியூன் படக்காட்சி போல் இருக்கிறது. இதில் சில காட்சிகள் பிரம்மாண்டமாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு காமெடியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் நடிகர்கள் பிரபாஸின் லுக்கும் படுமோசமாக இருந்தது. இதனை பார்த்தவுடன் இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இது மண்ணைத்தான் கவ்வ போகிறது என ரசிகர்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த படத்தை கமல்ஹாசனின் வித்தியாச நடிப்பு மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் பெயரை ப்ராஜெக்ட் கே என இருந்த நிலையில் அதனை கல்கி என மாற்றி இருக்கிறார்கள்.

இன்றிலிருந்து 900 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும் கதைகளமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். மொத்தத்தில் பிரபாஸுக்கு இன்னொரு தோல்வி படமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

Most Popular