Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் வசூல் சரிவு.. இவ்வளவு கம்மியா?

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் வசூல் சரிவு.. இவ்வளவு கம்மியா?

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட கால கனவுகளாக இருந்து கடந்த ஆண்டு நிஜமானது பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக்கி இருந்தார் இயக்குனர் மணிரத்னம்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி ,கார்த்தி,திரிஷா ,ஐஸ்வர்யா ராய் ,பார்த்திபன் சரத்குமார் ,ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, துள்ளிபாலா ,பிரபு விக்ரம் பிரபு போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படி நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்த இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் பாகுபலி போன்று பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆவலுடன் காத்திருந்தார்கள். கடந்த ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பாகுபலி அளவிற்கு பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதன் தாக்கத்தால் இரண்டாவது பாகத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது ஒரு புறம் இருக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகமெங்கும் 500 கோடி ரூபாய் வரை வசூலை பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

ஆனால் கடந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் சுற்று கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் சரிந்துள்ளது.

தற்பொழுது வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு நிறைய மாற்று கருத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது .மணிரத்தினம் கல்கி எழுதிய நாவலையே மாற்றி அமைத்திருக்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இது ஏற்கனவே பலரும் அறிந்த நாவல் என்பதால் இதனுடைய கதைக்களம் பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதில் இயக்குனர் மணிரத்தினம் மாற்றம் செய்ததால் இத்திரைப்படத்தின் மீது ஒரு தப்பான அபிப்பிராயம் அனைவருக்கும் தோன்றுவிட்டது .

இதன் காரணத்தினாலும் இல்லை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த பிரம்மாண்டமான படைப்பை திரைப்படத்திற்கு இல்லை என்பதாலும் தெரியவில்லை. இது திரைப்படத்தின் மீது ரசிகர்கள் தற்பொழுது ஆர்வம் காட்டவில்லை.

இதுவரை இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்று நினைத்தாள் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் ஒரு பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவில் இதுவரை 43 கோடி வசூலை பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது .இதையெல்லாம் மொத்தமாக சேர்த்து உலகமெங்கும் இந்த திரைப்படத்திற்கு 310 கோடி ரூபாய் வசூல் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

500 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் இரண்டாவது பாகம் சரி வை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஒரு வரலாற்று காவியத்தை படமாக்கும் பொழுது அதன் மீது இயக்குனர் மணிரத்தினம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற கருத்து ரசிகர்களிடம் பரவி வருகிறது.இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பு கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இல்லை.

Most Popular