சினிமா

இரவின் நிழல் படத்தின் முதல் காட்சி பார்த்த பொதுமக்களின் கருத்து ! பார்த்திப்பன் நெகிழ்ச்சி

Parthiban Iravin Nizhal

இரவின் நிழல் திரைப்படத்தின் முதல் காட்சி சென்னையில் தற்போது திரையிடப்பட்டு முடிவாகி இருக்கிறது. ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்துள்ள நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் இந்த முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் முன்னணி நடிகர்கள் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படுவது போல் சென்னை கமலா தியேட்டரில் இரவின் நிழல் திரைப்படத்திற்கு நான்கு மணி காட்சி போடப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் படத்தை வந்து பார்த்தனர். நடிகர் பார்த்திபன், படக்குழுவினருடன் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரவின் நிழல் திரைப்படத்தை விமர்சனங்கள் மூலம் பொது மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் மேலும் ஆஸ்கார் விருதை தான் எதிர்பார்த்தேன் ஆனால் அதிகாலை 4 மணி காட்சி தன் படத்திற்கு திரையிடப்படும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இதன் மூலம் புது முயற்சி எடுக்கும் இளைஞர்களுக்கு வேகம் அளிக்கும் என நம்புகிறேன் என பார்த்திபன் கூறினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் 7 மணி காட்சிகளும் திரையிடப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் முடிவடைந்து தற்போது ரசிகர்கள் இரவின் நிழல் படம் குறித்து விமர்சனம் கூறி வருகின்றனர். இரவின் நிழல் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தைக் கண்ட பல ரசிகர்களும் படம் தரமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தமிழ் சினிமாவின் பெருமை இரவின் நிழல் திரைப்படம் என பதிவிட்டுள்ளனர். இரவின் நிழல் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படத்திற்கான ஆர்ட் வொர்க் , லைட்டிங் சிறப்பாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர். இதே போன்று இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசை பலம் சேர்த்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இருண்ட வாழ்க்கையில் நம்பிக்கையாக வரும் ஒளி தான் இரவின் நிழல் என ஒற்றை லைன் விமர்சனத்தையும் ரசிகர்கள் தந்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படத்திற்காக பட குழுவினர் சுமார் 90 நாட்கள் பயிற்சி பெற்று அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கியிருக்கின்றனர். பார்த்திபனின் அசுர உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். பார்த்திபன் மட்டுமே நடித்து வெளியாகி விருதுகளைப் பெற்ற ஒத்த செருப்பு திரைப்படத்தை போல் இரவின் நிழல் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top