சினிமா

” 2022இல் வெளியான சிறந்த படம் இதுதான் ” கார்கி படத்தின் பொதுமக்கள் கருத்து ; சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டுகள்

Sai Pallavi Gargi

பிரேமம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.அவர் அண்மையில் நடித்த சியாம் சிங்காராய் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. தற்போது நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடித்த காக்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார் .ஜெகமே தந்திரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.

96 திரைப்படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிற்கு இசையமைத்து அசத்தியிருக்கிறார் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பள்ளி ஒன்றில் ஆசிரியராக நடிகை சாய் பல்லவி பணியாற்றுகிறார். அப்போது 9 வயது மாணவி ஒருவரை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக செய்திகள் வருகின்றன. இதனைப் பார்த்த சாய் பல்லவி வீட்டுக்கு சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது / வெகு நேரம் ஆகியும் தனது தந்தை வீட்டுக்கு வரவில்லை இதனை அடுத்து சாய் பல்லவி தேட ஆரம்பிக்கும்போது தான் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாய் பல்லவியின் தந்தையும், அப்பார்ட்மெண்ட் காவலாளியுமான ஆர் எஸ் சிவாஜியை போலீசார் கைது செய்திருக்கின்றனர் என்று.. இதனை அடுத்து சாய் பல்லவி போலீசாரிடம் தனது தந்தை தவறாக கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டு பின்னர் வழக்கறிஞரை நாடுகிறார்.

Advertisement

இந்த நிலையில் சாய் பல்லவியின் தந்தையின் முகத்தை ஊடகங்கள் தொலைக்காட்சியில் வெளியிட எந்த வக்கீலும் சாய்பல்லவிக்கு உதவி செய்ய வரவில்லை .இதை அடுத்து ஜூனியர் வழக்கறிஞராக நடிக்கும் காளி வெங்கட்டுடன் இணைந்து சாய்பல்லவி தன் தந்தையை எப்படி மீட்கிறார் தந்தை குற்றவாளியா இல்லையா என்பதை கூறும் படம் தான் கார்கி . நடப்பாண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக கார்கி நிச்சயம் இடம்பெறும் என்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

சாய்பல்லவி சிறந்த நடிப்பை வெளிகாட்டியிருப்பதாகவும் , அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது . சாய்பல்லவி தன் வாழ்க்கையில் சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு தனது ஆசிரியர் மூலம் ஆளாகுவது போன்ற காட்சியும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. பாலியல் தொந்தரவுக்கு ஆளானவரே பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருப்பது போல் காட்சி அமைத்து கதையை நகர்த்திச் சென்று இயக்குனருக்கு நிச்சயம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

Advertisement

முதல்முறையாக நடிகர் காலி வெங்கட்டுக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது . இதில் அவர் சிக்ஸர் அடித்துள்ளார். நீதிமன்றங்களில் காட்சி ஒன்று யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், ஆனால் கைது செய்தவர்கள் குற்றவாளியா என்பதை நிரூபிக்க ஆதாரத்தை சொல்ல வேண்டும் போன்ற வசனங்கள் மூலம் கில்லி போல் அடித்திருக்கிறார் நடிகர் காலி வெங்கட்.

நீதிபதியாக திருநங்கை சுதா வை இயக்குனர் நடிக்க வைத்திருப்பதற்கு தனி சல்யூட் கொடுக்கலாம். அதில் திருநங்கை சுதா , ஆண்களுடைய ஆதிக்கம் மனம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். பெண்களுடைய கஷ்டங்களும் எனக்கு தெரியும் என்று அவர் பேசும் ஒரு வசனம் திரையரங்கில் கிளாஸ் அள்ளுகிறது. படம் இப்படி தான் செல்லும் என அனைவரும் யூகித்த நிலையில் அதற்கு நேர்மாறாக ஒரு கிளைமேக்ஸ் டிவிஸ்ட் வைத்த இயக்குனருக்கு பாராட்டு தரலாம். மொத்தத்தில் கார்க்கி திரைப்படம் ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் பார்க்க வேண்டிய ஒரு அற்புத படைப்பு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top