1998ல் விக்னேஷ் நடிப்பில் வேலை, 2000தில் மாதவன் நடிப்பில் என்னவள், 2002 இல் மம்முட்டியை வைத்து ஜூனியர் சீனியர் என்ற இந்த மூன்று திரைப்படங்களை மட்டும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ்.
20 வருட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் குக் வித் கோமாளி பிரபலம் புகழை வைத்து தற்பொழுது ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மிஸ்டர் ஜு கிப்பர் என்பதுதான் இத்திரைப்படத்தின் பெயர்.
விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நிஜப் புலியை வைத்து திரைப்படத்தை இயக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .திரைப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட கதாநாயக்கர் புகழ் திரைப்படத்தைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார் இயக்குனர் சுரேஷ்.
ஒரு வருடம் கழித்து திடீரென்று போன் செய்து ஒரு வழியாக திரைப்படத்தில் நடிக்க புலி கிடைத்து விட்டது .காட்டிற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார் .நானும் சென்றேன் அங்கு வாயைப் பிளந்தால் நானும் கதாநாயகியும் சேர்ந்தே உள்ளே சென்று விடும் அளவிற்கு மிகப்பெரிய வாயுடன் ஒரு புலி இருந்தது.
அதனுடன் திரைப்படத்தில் இணைந்து நடிப்பதற்காக புலியுடன் பழகுங்கள் என்று கூறினார் இயக்குனர் .பார்க்கவே பயமாக இருக்கிறது இதில் எப்படி பழகுவது என்று அவருடைய ஸ்டைலில் நகைச்சுவையாக அதைப் பற்றி கூறியிருந்தார் புகழ்.
மேலும் துணை இயக்குனர்கள் எல்லாம் என்னை புலிக்கு பல் விலக்கி விட சொன்னார்கள் புலிக்கு பல் விளக்குவது எளிதா அது ஏன் பல் விளக்கப் போகிறது என்று நான் அந்த சீனிலை நடிக்கவே இல்லை .அந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறேன் இந்த திரைப்படத்திற்காக .இது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி இருந்தார் புகழ்.
தற்பொழுது நிகழ்ச்சி நடக்கும் இந்த பிரசாந்த் ஸ்டூடியோவிற்கு எதிரில் இருக்கும் காவிரி நகரில் நான் ஒரு கடையில் வாட்டர் வாஷ் வேலையில் இருந்தேன். பின் அதே தெருவில் ஒரு கடையில் எச்சி இலை எடுத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது இந்த பிரசாந்த் ஸ்டுடியோவில் என் திரைப்பட பிரமோஷன் நடப்பதை பார்க்கும் பொழுது நம்பவே முடியவில்லை சந்தோஷமாக இருக்கிறது என்று கூறினார்.
அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் சூரி புகழுக்கு சில அறிவுரைகளை கூறினார் .இதுபோல் நானும் கஷ்டப்பட்டு தான் இங்கு வந்தேன் கடினமாக போராடு. உனக்கான இடம் கிடைக்கும் என்று கூறினார் நடிகர் சூரி.