கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் ஐகானிக் ஸ்டார் என்று அழைக்கப்படும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெயரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் எல்லாம் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் ஹிந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றது. மீதம் உள்ள எல்லா மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்று 380 கோடி ரூபாய் வசூலை ஒட்டுமொத்தமாக புஷ்பா திரைப்படம் பெற்றது. திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஸ்டைல் அவர் பேசும் விதம், நடை எல்லாம் ரசிக்கும் விதத்தில் இருந்தது.
இதனால் இந்த திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தின் உடைய பட குழுவினர்கள் ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
வருகின்ற ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தின் கிலிம்பிஸ் வீடியோ வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் புஷ்பா அப்டேட் குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.
வரும் 2024ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தான் புஷ்பா திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட போவதாக படக்குழுவினர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இனி நாளுக்கு நாள் புஷ்பா 2 The Rule திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்கள் வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புஷ்பா 2 திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதல் பாகம் மிகப்பெரும் ஹிட் ஆனதால் கதையை மாற்றி வேறு பல சீன்களை எடுக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இதற்காக படப்பிடிப்பு தொடங்கப்பட இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக புஷ்பா 2 திரைப்படம் சூட்டிங் தள்ளிப்போனது. தற்போது ஒருவழியாக திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.