2021ஆம் இறுதியில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத் பாசில், ராஷ்மிக்கா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. இப்படம் உலகெங்கும் மொத்தம் 350 – 373 கோடிகள் வசூல் செய்தது, அதில் 109 கோடிகள் இந்தியாவில் மட்டுமே. படத்தில் சண்டைக் காட்சி, புஷ்பாவின் ஸ்டைல், பாடல்கள் என அனைத்தும் ட்ரெண்டாக இருந்தது.
இப்படத்தின் இயக்குநர் புஷ்பா மொத்தம் 3 பாகங்கள் என முன்னரே அறிவித்துவிட்டார். முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றியை அடுத்து தற்போது புஷ்பா 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு இரண்டாம் பாகத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரபூர்வமாக வெளியாவதால் ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.
ரசிகர்களை உற்சாகமாக்க புஷ்பா படக்குழு அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் அன்று புரோமோ வீடியோவை வெளியிட்டது. “ புஷ்பா எங்கே ? ” என்ற தலைப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளிலும் இந்த வீடியோ வெளியானது.
8 குண்டு அடிகளுடன் திருப்பதி சிறையில் இருந்து தப்பிச் சென்ற புஷ்பாவை காவல் துறையினர் சிறப்புப் படை அமைத்து தேடி வருகின்றனர். சிலர் அவர் இறந்துவிட்டார் என்கின்றனர் ஆனால் சரியாக எந்த தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை. போலீசாரே புஷ்பாவைக் கொன்றுவிட்டு இப்படி நாடகம் ஆடுவதாக எண்ணி புஷ்பாவின் ஆதரவாளர்கள் பேருந்துகளை கொளுத்தி போராட்டம் நிகழ்த்துகின்றனர்.
வீரப்பனைப் போலவே புஷ்பாவும் சந்தன மரங்களை கடத்தி அதில் வந்த லாபத்தை வைத்து மக்களுக்கு உதவியுள்ளார், அதனாலே அவருக்கு இவ்வளவு ஆதரவு. புஷ்பா இங்கு இல்லை என்றால் ஜப்பான், அமெரிக்கா போன்ற எதேனும் ஓர் நாடில் இருக்கலாம் என நம்பும் வேளையில் காட்டில் கிடைத்த சி.சி.டி.வி காட்சியில் மாஸான என்ட்ரி கொடுத்தார் புஷ்பா. அவரைக் கண்டு புலியே இரண்டு அடி பின்னால் சென்றது. அதைக் கண்ட மக்கள் புஷ்பா இன்னும் சாகவில்லை என்ற குஷியில் கொண்டாடினர்.
இந்த ஒரு புரோமோ காட்சியை மட்டுமே படக்குழு தனியாக செலவு செய்து ஷூட் செய்தது. கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இப்பணிகள் நிறைவு பெற்றது. இந்த புரோமோ வீடியோவின் பட்ஜெட் 4 கோடிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளன. ஒரு புரோமோவுக்கு 4 கோடியா எனஸ்ர ஷாக்கில் பார்வையாளர்கள் திகைத்து போயுள்ளனர், காட்சிகளைப் பார்க்கையில் நிச்சயம் அவ்வளவு செலவாகியிருக்கும் எனத் தெளிவாகத் தெரிகிறது. புஷ்பா 2 படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடிகள் ஆம்.