சினிமா

புஷ்பா 2 படத்தின் மெகா அப்டேட் அறிவிப்பு.. ! தரமான சம்பவம் காத்திருக்கிறது.. !

Pushpa

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சிறப்பித்த பான் இந்தியா திரைப்படம் புஷ்பா. இதில் அல்லு அர்ஜுன் தவிர ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சமந்தா, சுனில், அஜய் கோஷ் மற்றும் சிலர் நடித்திருந்தனர். சந்தன மரக் கடத்தல் பற்றியும் அங்கு நடக்கும் அரசியல் பற்றியும் கொண்டது படம். சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படம் உலகெங்கும் 350 கோடிகள் வசூல் செய்தது, அதில் 108 கோடி இந்தியாவில்.

தேவி ஶ்ரீ பிரசாத் பி.ஜி.எமில் பி‍ச்சி உதறிவிட்டார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று பல மாதங்களுக்கு டிரெண்டிங்கில் இருந்தது. அல்லு அர்ஜுன் சண்டைக் காட்சி, ஶ்ரீவள்ளி டான்ஸ், ராஷ்மிகா பர்பார்மன்ஸ், வில்லன்கள் மோதல், கிளைமாக்சில் பஹத் பாசில் நேரடி மோதல் மற்றும் சமந்தாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடனக் காட்சி என நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு படத்தில் ஏகப்பட்ட நல்ல காட்சிகள்.

Advertisement

முதல் பாகம் வெளியாவதற்கு முன்பே பார்ட் 2 பற்றி படக்குழு அறிவித்துவிட்டது. அதற்கான பணிகளில் அவர்களும் தீவிரமாக உள்ளனர். இந்த பாகத்தில் விஜய் சேதுபதி இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன, ஆனால் படக்குழு எதையும் உறுதி செய்யவில்லை. படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை, ஏக்கத்தில் ரசிகர்கள்.

அறிவிப்பு தான் வரவில்லை, படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடர்ந்த காடுகளில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பு அடுத்து தாய்லாந்தில் நடக்கவிருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்பிரல் 8ஆம் தேதிக்கு ஓர் சிறப்பு வீடியோ காட்சியை படக்குழு வெளியிடவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த மெகா அப்டேட் படத்தின் நாயகனின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் வரவிருக்கிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top