Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஆர் .ஜே பாலாஜி இயக்கத்தில் தளபதி 69 திரைப்படமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஆர் .ஜே பாலாஜி இயக்கத்தில் தளபதி 69 திரைப்படமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கோட் திரைப்படத்தில் நடிக்கும் தளபதி விஜய் தற்பொழுது அரசியலில் களம் இறங்க போவதாக விட்ட அறிக்கையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து இனி எந்த திரைப்படத்தில் நடிக்க போவதில்லை என்று கூறியது தான் அவர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

கோட் திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் நடிக்கும் கடைசி திரைப்படம் என்றும் பகிரங்கமாக தளபதி விஜய் அறிவித்திருந்தார். இதனால் இந்த கடைசி திரைப்படமான 69-வது திரைப்படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குனர் யார் ?என்ற கேள்வி பலர் மனதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தைப் பற்றிய ஒரு அப்டேட்ஸ்கள் வெளிவந்திருக்கிறது. திரைப்படத்திற்கு இரண்டு இயக்குனர்கள் வரிசையில் நிற்பதாக தகவல் வந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ் ஜே சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களை வைத்து பேட்ட, ஜிகர்தண்டா ,ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தளபதி விஜய்யிடம் 69 ஆவது திரைப்படத்திற்கு கதை கூறி இருக்கிறார் .அந்த கதை தளபதி விஜய்க்கு பிடித்திருப்பதாகவும் அவரை கன்பார்ம் செய்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் எதிர்பாராத ஒரு இயக்குனர் இந்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறார் . காமெடியனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்பு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மூக்குத்தி அம்மன் ,வீட்டில் விசேஷம் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆர் ஜே பாலாஜி தளபதி விஜய்யிடம் 69 வது திரைப்படத்திற்கு கதை கூறிய இயக்குனருள் ஒருவராவார் .

- Advertisement -

இவருடைய கதை தளபதி விஜய்க்கு ஒரு வரி கதையிலேயே பிடித்து விட்டதாகவும். அவரையும் தளபதி விஜய் கன்ஃபார்ம் செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .இதற்கு முன்பு ஆர்.ஜே பாலாஜியிடம் தளபதி விஜய் கதை கேட்டதாகவும் கேட்டுவிட்டு தளபதி விஜய் உன்னுடன் நான் காமெடியாக ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன் .

ஆனால் உன்னுடைய கதை என்ன இப்படி இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டதாகவும் அத்திரைப்படத்தில் விரைவில் தளபதி விஜய் நடிப்பார் என்றும் சில பேட்டிகளில் ஆர் ஜே பாலாஜி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் விஜய் டைரக்ட் செய்வதற்கு வேண்டிய தகுதிகளை வளர்த்து வருகிறேன் என்றும் ஆர்.ஜே பாலாஜி குறிப்பிட்டு இருந்தார். அதனால் இந்த 69 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியை இயக்குனராக ஒப்புக் கொள்வதற்கும் தளபதி விஜய் தயாராக இருக்கிறார் என்ற தகவலும் வெளியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகிய இருவரில் யாரை தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்திற்கு உறுதி செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் .இதில் யாராக இருந்தாலும் ரசிகர்கள் திரைப்படத்தின் நிச்சியம் கொண்டாடுவார்கள்.

வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கும் ஆர் ஜே  பாலாஜிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் அவருடைய சினிமா வாழ்க்கையும் மிகப்பெரிய திருப்புமுனையாக இது இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .

அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் ஒரு திறமையான இயக்குனர். அவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாம் வெற்றி அடைந்திருப்பதால் தற்பொழுது வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கூட இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததன் அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க போவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

Most Popular