இயக்குநர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பேன் இந்திய மொழியில் வெளிவந்தது அனிமல் திரைப்படம்.
ரன்பீர் கபூர் ,ரஷ்மிகா மந்தானா நடித்த அனிமல் திரைப்படம் நேற்று netflix என்னும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கலவையான விமர்சனம் இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் பெண்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள், ஆண் ஆதிக்கத்தை காட்டி இருக்கிறார்கள், ஆபாசமாக எடுத்திருக்கிறார்கள் என்று பல கருத்துக்கள் இந்த திரைப்படத்திற்கு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது பிரபல நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்
இப்படி ஒரு படத்தை யாராவது பாப்பாங்களா? படம் முழுக்க அவ்வளவு கிரிஞ்சாக இருக்கு குறிப்பிட்ட ஒரு படத்தை பார்க்கும் போது எனக்கு வாந்தி வந்திருச்சு அந்த படத்தை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு கோபம் வருது என்று நடிகை ராதிகா பெயர் குறிப்பிடாமல் ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சித்து இருந்தார்.
நேற்று ஓடிடியில் வெளிவந்த அனிமல் திரைப்படம் தான் ராதிகா குறிப்பிட்ட அந்த திரைப்படம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
திரைப்படம் முழுவதும் லாஜிக்கே இல்லாத அளவிற்கு கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்று ஒட்டுமொத்த திரைப்படமும் இது போன்ற விமர்சனத்திற்கு தகுதியானது தான் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்னும் சிலர் நடிகை ராதிகா குறிப்பிட்டது இயக்குனர் பிரசாந்தின் இயக்கிய சலாார்த் திரைப்படமாக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள.
ஏனென்றால் சலார்த் திரைப்படம் முழுவதும் பில்டப்புகள் நிறைந்து இருப்பதாலும் ,லாஜிக் இல்லாத ஆக்சன் இருப்பதாலும் இந்த திரைப்படத்தைக் கூட நடிகை ராதிகா இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்