Thursday, October 3, 2024
- Advertisement -
Homeசினிமாலோகேஷ் கனகராஜ் & நெல்சன் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.. ராகவா லாரன்ஸ் அதிரடி பேச்சு.. !

லோகேஷ் கனகராஜ் & நெல்சன் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.. ராகவா லாரன்ஸ் அதிரடி பேச்சு.. !

கோலிவுட்டில் குழந்தைகள் கொண்டாடும் ஹீரோவாக ராகாவாலாரன்ஸ் திகழ்கிறார். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 1, 2, 3 என அடுத்தடுத்து பேய் படங்கள் செய்து அனைத்திலும் வெற்றியும் கண்டார். இடையே சாதாரண கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் பி.வாசு தொடர்ந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சுமார் வரவேற்பைப் பெற்றது.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரவுத் நடித்தார். என்னதான் பேய் படங்களில் ராகவா லாரன்ஸ் அசத்தினாலும் எல்லாமே ஒரு அளவு தான். மறுபக்கம் சுந்தர்.சி அரண்மனை சீரிஸை தொடர கோலிவுட்டில் பாதி பார்வையாளர்கள் பேய் படங்களையே வெறுக்கத் துவங்கிவிட்டனர்.

- Advertisement -

இதனாலே நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது வெற்றொரு பாதையில் பயணிக்கிறார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முன்னணியில் நடிக்கும் படம் ஜிகர்தண்டா டேபிள் எக்ஸ். படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட ஹிட் ஆகி கார்த்திக் சுப்புராஜின் சினிமா வாழ்கையில் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு இரண்டாம் பாகத்தின் அப்டேட்டை கொடுக்கும் போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ராகவா லாரன்ஸ் நடிப்பது பெரிய ஷாக்காக இருந்தது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அனைத்து பணிகளும் நிறைவுப் பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த மாதம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, “ தற்போது தமிழ் சினிமாவில் பழையது போல கதைகள் வேலைக்கு ஆகாது. கொரோனாவுக்குப் பின் மாற்றங்கள் வந்துள்ளன. லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்ற இயக்குனர்கள் கதைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புதுவித திரைக்கதை மற்றும் ஆக்க்ஷனில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். நாமும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டுமென்பதற்காக ஜிகர்தண்டா பார்ட் 2 படத்தில் நடித்தேன். ” என்றார்.

Most Popular