சினிமா

நயன்தாராவின் 75வது படத்தில் இணையும் ராஜா ராணி கூட்டணி ! ஷங்கரின் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு

Nayanthara Jai and Sathyaraj

தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் சிவகாசி, சிவாஜி , ஆகிய படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நடிகையாக இருந்த நயன்தாரா, தனது திறமை மற்றும் அழகான நடிப்பாலும், கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்து தற்போது அழியாத புகழை பெற்றுள்ளார்.

நடிகர்களுக்கு இணையாக அவர் மட்டும் கதா நாயகியாக நடிக்கும் திரைப்படம் வசூலை ஈட்டுவதால் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றாலும் மீண்டும் தமிழ் சினிமா பக்கத்தில் கவனத்தை திருப்பி உள்ளார் நயன்தாரா . தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் ஜவான், ஜெயம் ரவியுடன் இயக்குனர் அகமது இயக்கும் படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் 75 வது திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ட்ரீடென்ட் ஆர்ட்ஸ், நாட் ஸ்டுடியோ , மற்றும் ஜி ஸ்டூடியோஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சங்கரின் உதவி இயக்குனரான நிகிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுகம் இயக்குகிறார்.

Advertisement

நயன்தாரா திரைப்பட வாழ்க்கையில் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்த திரைப்படம் ராஜா ராணி. இந்த படத்தில் நடித்த ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா ராணி திரைப்படத்தில் ஜெய் முதலில் நயன்தாராவுக்கு ஜோடியாக வருவார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை .இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர் . இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது இதில் சத்யராஜ் ஜெய் கே எஸ் ரவிக்குமார் ரெடின் கிங்சிலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர் படத்தின் மோஷன் போஸ்டர் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியதும் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி தான் என்பது அனைவருக்கும் தெரியும் . தற்போது அதே பாணியில் சங்கரின் மற்றொரு உதவி இயக்குனரான நிகிலேஷ் கிருஷ்ணா நயன்தாராவின் 75 வது படத்தை இயக்குகிறார். இதனால் அவரும் அடிலியைப் போல் பெரும் உச்சத்தை தொடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top