Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாஆஸ்கார் வரிசையில் இணையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் !

ஆஸ்கார் வரிசையில் இணையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் !

2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான வெளிநாட்டு திரைப்படங்கள் பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பது கனவாகும். இந்த நிலையில் நடிகர் கமல் படங்கள் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியல் வரை தகுதி பெற்று பின்னர் இறுதிச்சுற்றில் வெளியேறி விடும் . ஆஸ்கார் விருது இந்தியாவுக்கு எட்டா கணியாக இருந்த நிலையில் Slumdog millionire என்ற அமெரிக்க திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றது .

- Advertisement -

இதில் இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது .இதன்பிறகு பல்வேறு பாலிவுட் படங்கள் ஆஸ்கார் விருதுவரை சென்று இறுதிச்சுற்றில் வெளியானது. கடந்த ஆண்டு Gully பாய்ஸ் என்ற திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று வெளியேறிவிட்டது. இதில் நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று இறுதிப்பட்டியலில் இடம் பெறாமல் திரும்பி உள்ளது. இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்தனர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்த படம் நெட்பிளிக்சில் அண்மையில் வெளியாகி வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு ரசிகர்கள் ட்ரிபிள் ஆர் படம் மார்வெல் படத்திற்கு இணையாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விமர்சகர் விருதுக்காண பட்டியலில் ட்ரிபிள் ஆர் இணைந்துள்ளது. இதனால் ஆஸ்கார் திரைப்படத்திற்கும் ட்ரிபிள் ஆர் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முதலில் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு ட்ரிபிள் ஆர் படத்தை அனுப்ப வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஹாலிவுட்டில் உள்ள சினிமா விமர்சனங்கள் படத்தை பார்த்துவிட்டு அதற்கு வாக்கு செலுத்துவார்கள். அதன் அடிப்படையில் ட்ரிபிள் ஆர் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்தின் ஆஸ்கர் இறுதி பட்டியலில் தகுதி பெறும்.இதற்கு முதல் படியான சர்வதேச விமர்சன விருதுக்கு தற்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Most Popular