Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபாபா கதையை மாற்றும் ரஜினி.. புதிய வசனத்திற்காக டப்பிங்.. என்ன மாற்றம் தெரியுமா?

பாபா கதையை மாற்றும் ரஜினி.. புதிய வசனத்திற்காக டப்பிங்.. என்ன மாற்றம் தெரியுமா?

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தற்போது மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இது குறித்து தற்போது பல புதிய தகவல் வெளியாகி இருக்கின்றன. காந்தாரா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து பேசியிருக்கிறார்.

அப்போது மக்கள் தற்போது ஃபெண்டசி படங்களை விரும்பி பார்ப்பதால் பாபா படத்தை இப்போது ரிலீஸ் செய்தால் வரவேற்பு இருக்கும் என ரஜினி கூறியிருக்கிறார். இதன் அடிப்படையிலேயே பாபா திரைப்படத்திற்கு டால்பி அட்மாஸ் தொழில் நுட்பம் இசை மற்றும் 4K தொழில்நுட்பத்துடன் படத்தை ரிலீஸ் செய்யும் பணி நடைபெறுகிறது.

- Advertisement -

மேலும் பாபா படம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடியது. இதனால் இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் படத்தின் கதையை மாற்றி தேவையில்லாத காட்சிகளை வெட்டி விட்டு படத்தை சுருக்கி வெளியிடுமாறு ரஜினி கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் தற்போது சுரேஷ் கிருஷ்ணா தீவிரமாக இயங்கி வருகிறார். இதில் பாபா திரைப்படத்தில் மைனஸ் ஆக பார்க்கப்பட்டது ஏழு மந்திரங்கள்.

- Advertisement -

இதனை நடிகர் ரஜினி நான்கு அல்லது ஐந்தாக குறைக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதன் பெயரில் படத்தில் தேவையில்லாத காட்சியை நீக்கி விட்டு மறு எடிட் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.இந்த நிலையில் காட்சிகள் மாற்றப்பட்டதற்காக ரஜினி புதிய வசனத்தை பேசியிருக்கிறார் இதற்கான டப்பிங் பணியில் ரஜினி கலந்து கொண்டு உள்ளார். பாபா படத்தில் ரீ ரிலீஸ் ஆக டிரைலர் டீசர் வெளியிடும் பணி நடைபெறுகிறது என்றும் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி பாபா திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபா திரைப்படம் ரஜினி திரைப்பட வாழ்க்கையில் குறைவான வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தாலும் 2002 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்தது. இது குறித்து பேசி உள்ள சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷாவுக்கு பிறகு தாங்கள் மீண்டும் இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு ஏற்பட்டது. ஆனால் இது ஆன்மீகத்தை வலியுறுத்தும் படமாக அமைந்ததால் ரசிகர்களிடையே வரவேற்பை அப்போது பெறவில்லை என்று கூறி இருக்கிறார் .

Most Popular