சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாகவே நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். ஆனால் அவர் அரசியலுக்கு செல்ல போவதாக கூறியதிலிருந்து அவருடைய திரைப்படங்களின் வசூல் சரிய தொடங்கியது.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்து தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். திரையுலகத்தை சேர்ந்த பலரும் விஜய் தான் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று கூறியதால் அதனை ரஜினி ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
தளபதி விஜயை ரஜினியோட தீவிர ரசிகர் என்பதையும் மறந்து தற்போது ரஜினிக்கு போட்டியாக வந்துவிட்டார் என்பதற்காகவே அவரை திட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சூப்பர் சுப்பு எழுதிய ஹுக்கும் பாடலும் விஜய் வைத்து தான் எழுதப்பட்டது என்று ரஜினி ரசிகர்களும் கூறி வருகின்றார்கள்.
இந்த நிலையில் ஜெய்லர் பட ஆடியோ நிகழ்ச்சியில் சன் பிக்சர்ஸ் எடுத்த திரைப்படங்களின் பாடல் போடப்பட்டது. அதில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படுத்தியும் இயக்கியிருந்தார்.
அதில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடலுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். இதனை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாத ரஜினி ரசிகர்கள் விஜய் பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ரஜினி படம் மேடையில் விஜய் பாடல் ஏன் போட்டீர்கள் என ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி திட்டினர். மேலும் பாட்டை மாற்று என்று பலரும் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. எனினும் அந்த பாடல் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதேபோன்று நெல்சன், விடிவி கணேஷ்,கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், கலாநிதி மாறன் ரஜினி உள்ளிட்டோர் விஜயின் பெயரை இந்த நிகழ்ச்சிகள் பயன்படுத்தினர். இதனையும் ரஜினி ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரஜினி ரசிகர்களின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரஜினிக்கு இவர்களே கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விடுவார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.