Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாதன்னுடன் இணைந்து நடிக்க விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த ரஜினி

தன்னுடன் இணைந்து நடிக்க விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த ரஜினி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது.

- Advertisement -

அதில் ரஜினிகாந்த் பேசுகையில், அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு பல கதைகளை தான் கேட்டதாகவும் முதலில் ஒரு லைனில் சொல்லும் போது தனக்கு பிடித்துப் போனவைகளை மட்டும் டெவலப் செய்துவிட்டு வாருங்கள் என்று சொல்வேன்.

ஆனால் அது திரைக்கதையாக உருமாறும் போது அண்ணாமலை பாட்ஷா போன்ற படங்களின்  சாயல்கள் இருப்பது போல் தோன்றும். அதனால் மிக கனத்த மனதுடன் அவனை வேண்டாம் என்று அந்த இயக்குனர்களிடம் சொல்லி விடுவேன். பின்பு கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற திரைப்படங்களை தான் பார்த்தபோது நெல்சன் இயக்கம் பிடித்துப் போனதால் அவரை கதை சொல்ல அழைத்தார்களாம்.

- Advertisement -

வழக்கமாக பத்து மணிக்கு கதை கேட்க தயாராகும் ரஜினி, நெல்சன் வழக்கமாக தாமதமாக எழுந்திருப்பதால் 11 30 க்கு வர சொன்னாராம். ஆனால் நெல்சன் 12 மணிக்கு மேல் தான் வந்தாராம். அது மட்டும் இல்லாமல் நல்ல காபியாக இருந்தால் கொடுங்கள் என்றாராம். முதலில் ஒரு காபி கொடுக்கப்பட்டு அதில் திருப்தி அடையாமல் மற்றொரு காபி குடித்த பின்பு தான் கதையை சொன்னாராம் ..

- Advertisement -

ஆரம்பமே அலப்பறை கூட்டிய நெல்சன் கதையின் ஒரு வரியை அபாரமாக கூறி திரைக்கதையை சிறப்பாக செதுக்கியுள்ளாராம்.
இதற்கிடையில் பீஸ்ட் படம் வெளியான போது பல எதிர்மறையான விமர்சனங்கள் நெல்சன் மீது வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த் படத்திலிருந்து  வெளியேற்றி விடுவார் என்ற தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. ஆனால் படம் செய்வதாக அறிவித்த பின் பின் வாங்கினால்  அந்த இயக்குனரின் எதிர்காலம் வீணாகிவிடும் என்ற நோக்கத்தில், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் அவர்களிடம் யோசனை கேட்கப்பட்டதாம். 

அவர், பீஸ்ட் படத்திற்கு பல எதிர்மறை கருத்துக்கள் வருவது உண்மை ஆனால் விநியோகஸ்தர்களுக்கோ ரசிகர்களுக்கோ இந்த நஷ்டமும் இல்லை என்று கூறி நெல்சன் இப்படத்தை இயக்குவதில் எனக்கு எந்தவித  ஆட்சேபனையும் இல்லை என்று கூறினாராம்.

இதை அடுத்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக தொடங்கியதாம், ஆனால்  நெல்சன் மிக ஜாலியாக ரஜினியிடம் உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் நான் சார்ஜ் ஏத்திக்கொள்கிறேன் என்று  பொறி ரஜினியை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாராம்.

மிக சுவாரசியமாக பேசும்  சுபாவம் கொண்டவரான நெல்சன் பட காட்சிகளை பதிவாக்கும் போது ஒரு ஹிட்லர் போல் செயல்படுவாராம்.
அனைவரையும் வாட்டி வதைத்து அவர் நினைக்கும் முகபாவனைகள் வரும் வரை ஒருவரையும் விட  மாட்டாராம்.

ரம்யா கிருஷ்ணனோடு ஒரு காட்சியில் தனக்கே எட்டு முறை டேக் வைத்து   நீலாம்பரிக்கு முன்பு படையப்பாக்கு இருந்த மரியாதையே போச்சி என்று நகைச்சுவையாக கூறினார் ரஜினிகாந்த்.அதன் பிறகு மேடையில் கொஞ்சம் எதார்த்தத்தை பேச தொடங்கிய சூப்பர் ஸ்டார், எனக்கு பயம் வந்துவிட்டது என்று இப்போதல்ல ஆறு வருடத்திற்கு முன்பே கூற தொடங்கி விட்டார்கள்.

எனக்கு பயம் இரண்டு பேரிடம் எப்போதும் உண்டு ஒருவர் கடவுள் மற்றொருவர் நல்ல மக்கள்.. ஏனென்றால் இவர்களை கஷ்டப்படுத்தினால் அந்த சாபம் நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மற்றவர்களிடம் பயமா? எனக் கா? என்று கூறினார்.

கே ஜி எஃப் ,கந்தாரா RRR
போன்ற  வெளி மாநில  படங்கள் உலக அளவில் பெரும் சாதனைகளை பெற்று வருவதை நாம் மறுக்க முடியாது. ஆனால் தமிழில் அத்தகைய படங்கள் வராமல் இருப்பது நமது துரதிஷ்டமே, அந்த நிலை மாற வேண்டும் அனைவரும் தமக்குள் போட்டி போடாமல் தமிழ் திரை உலகை போட்டி போட்டு முன்னேற்ற  பாடுபட வேண்டும் என்று கூறினார்.

மேலும் தனது அடுத்த 171 வது படத்தில் லோகேஷ் கனகராஜ் பிரபஞ்சத்தில் பிரவேசிக்க இருப்பதாக தெரிகிறது. இதில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யும் இணைந்து நடிப்பதற்கு மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது…
எது எப்படியோ எனது அரை மணி நேரம் பேச்சில் ரசிகர்களை கவர்ந்ததோடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்..

Most Popular