Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாபொங்கலுக்கு வசமாக சிக்கிய சூப்பர் ஓன்.. வரிசை கட்டிய 4 ஹீரோக்கள்

பொங்கலுக்கு வசமாக சிக்கிய சூப்பர் ஓன்.. வரிசை கட்டிய 4 ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு செல்வதாக கூறிய நிலையில் அவருடைய மார்க்கெட் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

- Advertisement -

இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு விஜய் உச்சத்திற்கு வந்தார். ஆனால் தற்போது அரசியல் பிரவேசம் இல்லை என்று முடிவு எடுத்த சூப்பர் ஸ்டார் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த கேப்பில் தமது இடம் காணாமல் போனதை நினைத்து கடுப்பான சூப்பர் ஸ்டார் தற்போது தன்னுடைய இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நமது ஹீரோவின் இடம் பறிக்கப்பட்டு விட்டது என்பதை ஏற்க முடியாத ரஜினி ரசிகர்களும் பல்வேறு இளம் நடிகர்களை வம்பு இழுத்து சண்டை போட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இறுதி வசூலை லியோ முறியடித்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாருக்கு மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அவர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நீண்ட கேமியோ ரோலில்தான் நடித்திருக்கிறார். ஆனால் இது சூப்பர் ஸ்டார் படமாக தான் பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ள நிலையில் அவருக்கு போட்டியாக முன்னாள் மருமகன் தனுஷ் தன்னுடைய படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் பந்தயத்தில் மேலும் இரண்டு படங்கள் இணைந்து இருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படமும் போட்டிக்குள் வந்துள்ளது.

இதனால் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினியை வைத்து அவருடைய மகள் இயக்கிய திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் அப்படி ஒரு வரலாறு மீண்டும் ஏற்படுமா என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Most Popular