Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாசிபி சக்கரவர்த்திக்கு திடீர் நோ சொன்ன ரஜினிகாந்த்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சிபி சக்கரவர்த்திக்கு திடீர் நோ சொன்ன ரஜினிகாந்த்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்பொழுது உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் 13ஆம் தேதி மே மாதம்  திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி எஸ் ஜே சூர்யா சூரி போன்ற போன்ற தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இவருடைய பெயரையே கதாநாயகனுக்கு வைத்து அது தன்னுடைய கதை போன்றே அமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு அனிருத்  இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்களும் சற்று குறைவான வரவேற்பையே பெற்றது.

இந்தத் திரைப்படம் வசூலில் 100 கோடியை தொட்டது. ஆனாலும் ஒரு சிறந்த வெற்றி படமா இது என்றால் சற்று கேள்விக்குறியான ஒன்று தான். மொத்த திரைப்படத்தையும் பார்க்கும் சற்று கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. ஆனாலும் இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு காரணம் இந்த திரைப்படத்தின் உடைய இறுதிக்கட்டம் அதாவது கிளைமேக்ஸ் தான்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை பார்த்து  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் உங்கள் திரைப்படம் நன்றாக இருந்தது. இதே போன்ற ஒரு சிறந்த கதையை எனக்கும் தயார் செய்து கொடுக்கும் பாரு இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டிருந்தார்.

- Advertisement -

அதே வேகத்தோடு தற்பொழுது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காகவே ஒரு கதையையும் தயார் செய்து அந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் கூறியும் இருக்கிறார். ஆனால் இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தியின்  இந்த கதை தனக்கு திருப்தியாக இல்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிராகரித்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தலைவர் 171 வது படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular