சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் நம்பி இருக்கும் திரைப்படம் என்றால் அது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெய்லர் தான். இந்த திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து அனிருத் இசையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்போது வெளியாகியிருக்கிறது.இது நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் சாயலில் இருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது.
அதாவது நடிகர் ரஜினி ஒரு முக்கிய சிறைச்சாலையில் ஜெயிலராக இருக்கிறார். அந்த ஜெயிலில் பல முக்கிய குற்றவாளிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு குற்றவாளியின் தலைவரை அந்த ஜெயிலில் இருந்து காப்பாற்ற ஒரு கும்பல் முடிவெடுக்கிறது.
அந்த ஜெயிலில் பல கிரிமினல்கள் இருக்கிறார்கள். இதனை ரஜினி எப்படி முறியடிக்கிறார் குற்றவாளிகள் எப்படி தப்பவிடாமல் செய்கிறார். மற்ற குற்றவாளிகள் ரஜினிக்கு எந்தவித தொல்லையை தருகிறார்கள்.
அதனை எப்படி ரஜினி சமாளிக்கிறார் என்பதே கதையாக இருக்கிறதாம். இதனால் இந்த கதை ஒரு இரவில் நடந்து முடியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரும்பாலும் சிறைச்சாலை உள்ளேயே பெரும்பாலான காட்சிகள் நடக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இது தமன்னா எங்கிருந்து வருகிறார் என்றெல்லாம் தெரியவில்லை. ஒரே லொகேஷன் ஒரே இரவு என்பதால் படத்தின் காட்சி விறுவிறுப்பாக இல்லை என்றால் படம் போர் அடித்து விடும்.
மேலும் பீஸ்டில் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து விஜய் மக்களை காப்பாற்றுகிறாரோ அதே கதையை கொஞ்சம் மாற்றி சிறைச்சாலையில் இருக்கும் மற்ற தீவிரவாதிகளை ரஜினி தப்பவிடாமல் தடுக்கிறார். நெல்சனின் இந்த கதை வெற்றி பெறுமா ரஜினிக்கு இது கம்பேக்கை கொடுக்குமா என்பது எல்லாம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தெரிந்துவிடும்.