சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படதுக்கு எப்போது மவுஸ் தான். பட வெளியீட்டின் பிது டிக்கெட்க்கு ரசிகர்கள் வரிசையில் நிற்பது போல தற்போது தலைவர் ரஜினிகாந்தின் படத்தை தயாரிக்க வாய்ப்பு அளிக்குமாறு நிறுவனங்கள் பல வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.
ஒன்றரை ஆண்டுக்கு முன் சன் பிக்சர்ஸ் – நெல்சனுடன் ஜெயிலர் படத்துக்காக ரஜினி இணைந்தார். இன்னும் அந்தப் படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின்னர் தன் மகள் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இதோடு நிறுத்தாமல் தன் 170வது படத்தையும் அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் 170வது படம் உருவாகிறது. இதில் ரஜினி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
தலைவர் 171
கையில் மூன்று படம் வெளியாகாமல் இருக்கும் போதும் அவரை விடாமல் தயாரிப்பு நிறுவனங்கள் துரத்துகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மற்ற 5 பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ரஜினியின் 171வது படத்தை தயாரிக்க போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171வது படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் பரவின. கமலின் நிறுவனமும் அதைத் தயாரிக்க தீவிரமாக இருப்பதால் இந்த செய்து விரைவில் அதிகாரபூர்வமாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இன்று அதில் புதிய டுவிஸ்ட். கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற மிகச் சிறந்த படைப்புகளை தயாரிக்கும் ஹோம்பாலே பிலிம்ஸ் பெங்களூருவில் ரஜினியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் இயக்குனர் சுதா கொங்காராவும் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே ஹோம்பாலே நிறுவனத்திடம் ஒரு படம் செய்து தருவதாக சுதா அட்வான்ஸ் வாங்கிவிட்டார். ரஜினி ஒப்புக்கொண்டால் சுதா கொங்காரா தலைவர் 171வது அல்லது 172வது படத்தை இயக்குவார்.
எத்தனை தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள் தலைவர் ரஜினிகாந்தை அணுகினாலும் அவர் எதை தீர்மானிக்கிறாரோ அதுவே இறுதியில் நடக்கும். இப்போது சுதா கொங்காராவுக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.