சினிமா

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி – கமல் ! இன்னும் யார் யார் வராங்க தெரியுமா ?

Rajinikanth and Kamal Haasan

இயக்குனர் மணிரத்னம் தன் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை வெற்றிகரமாக படம்பிடித்து முடித்துவிட்டார். இந்த வரலாற்றுக் கதை கல்கி உடையது. இப்படத்திற்கான திரைக்கதையை இளங்கோ குமரவேலும் மணிரத்னமும் எழுதியுள்ளனர். படத்தில் ஜாம்பவான் நடிகர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா பிரதிபலிக்கின்றனர்.

தற்போது பொன்னியின் செல்வனின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இடையே புரொமோஷன் பணிகளிலும் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட படைப்பின் டீஸர் சென்ற மாதமே வந்தது. அதைக் கண்ட பின் பார்வையாளர்கள் பலரும் நல்ல கருத்தை தெரிவித்தனர். காட்சிகள் அனைத்தும் பிரமாதம். இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம்போல கலக்கிவிட்டார். மணிரத்னமுக்கு ரஹ்மான் எப்போதும் சிறந்த இசையை வழங்குவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

Advertisement

படத்தின் முதல் பாடலான ‘ பொன்னி நதி ‘ ஐந்து மொழிகளில் இந்த மாதம் வெளியாகியது. தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடினார். ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது இந்த பாடல். அடுத்த பாடலை விரைவில் படக்குழு ரிலீஸ் செய்யவும் உள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாட்டு வெளியிடுவதை பெரிய விழாவாக அரங்கேற்றினார். அதை விட பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 6ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். மீதம் இருக்கும் பாடல்கள் அனைத்தும் அன்று வெளியாகும்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். கமல் ரஜினி சிறந்த நண்பர்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இருவரும் ஒன்றாக மேடையில் நின்று சிறப்பாக பேசியுள்ளனர். நீண்ட வருடங்களுக்குப் பின் மீண்டும் அதைக் கான ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அவர்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மணிரத்னம். மோகன்லால், மம்முட்டி என தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமா பிரபலங்கள் பலரையும் அவர் அழைத்துள்ளார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top