சினிமா

32 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் ரஜினி – மணிரத்னம் ! ஷூட்டிங் எப்போது தெரியுமா ?

Rajnikanth and Maniratnam

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரையரங்குகளில் அபார வரவேற்பு பெற்றுதோடு வசூல் ரீதியாகவும் மாபெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் பாகத்தின் முடிவில் ஊமைரானி யார் என்ற சந்தேகத்துடன் பார்வையாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது. ஏற்கனவே ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியப் பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக இயக்குனர் மணிரத்னத்திடம் கேட்டதாகவும், அந்த சிறிய ரோலுக்கு அவரை நியமித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாரிக்க இயலாது என மணிரத்னம் மறுத்ததாகவும் இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.

Advertisement

இதனைக் கேட்டப் பின் ரசிகர்கள் பலர் மணிரத்னத்தின் படத்தில் மீண்டும் ரஜினியைக் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் விருப்பம் 32 வருடங்கள் கழித்து நிறைவேறப்போகிறது. ஆம், தளபதி படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இணைந்து செயல்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்தப் பின் லைகா நிறுவனம் தயாரிக்க இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களை முடித்தப் பிறகு இதே லைகா தயாரிப்பில் மணிரத்னத்துடன் இணையப் போகிறார் ரஜினிகாந்த்.

Advertisement

மறுபக்கம் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள மணிரத்னம் இந்த படத்தை வெளியிட்ட பிறகு ரஜினிக்கான படத்தில் கவனம் செலுத்துவார் எனக் கூறியுள்ளனர். மீண்டும் மணிரத்னம் – ரஜினி கூட்டணியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top