தமிழ் திரைப்பட உலகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வரும் நடிகர் ரஜினிகாந்த்க்கு இன்று விருது வழங்கப்பட்டது. பொதுவாக சினிமா உலகத்தில் தான் கருப்பு பணம் அதிகமாக புளங்கும் என குற்றச்சாட்டு இருக்கும்.மேலும் நடிகர்கள் வருமான வரியை சரிவர செலுத்துவதில்லை என்று கூறி அவ்வப்போது ஐடி ரெய்டும் நடைபெறும்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டுக்கான வருமான வரியை சரியாக செலுத்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டில் அதிக வரி செலுத்திய தமிழ் நடிகர் என்ற பெருமையும் நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் நடிகர் ரஜினிகாந்துக்கு பேசப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பணக்காரர்களுக்கு விதிக்கப்படும் சூப்பர் டேக்ஸ் என அனைத்தையும் சேர்த்து ரஜினிகாந்த் வரி கட்டியுள்ளார். இன்று வருமான வரித்துறை தினம் என்பதால் சென்னையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்து கொண்ட நிகழ்ச்சி வருமான வரித்துறை சார்பில் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டு அதிக வரி செலுத்திய நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் விருதைப் பெற்றுக் கொண்டார்.சில மாதங்களுக்கு முன் சொத்து வரியை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்து நீதிபதிகள் ரஜினிகாந்துக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர். இதற்கு ரஜினிகாந்த் மாநகராட்சி இடம் முறையிடுவதற்கு பதில் நீதிமன்றத்தில் தவறாக முறையிட்டு விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
ரஜினிகாந்தை பல்வேறு தரப்பினர் விமர்சித்து மீம்ஸ் போட்டனர். தற்போது அதற்கு பதிலடி தரும் வகையில் அதிக வரி செலுத்தி அரசிடம் சான்றிதழ் பெற்று ரஜினிகாந்த் அசத்தியிருக்கிறார்.தற்போது சன் பிக்சர்ஸ் உடன் ஜெய்லர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.ஆனால் இந்த படத்திற்கு ரஜினிகாந்தின் சம்பளம் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.