Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியின் 170வது படம்.. சிபி சக்கிரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்.. முழு விவரம்

ரஜினியின் 170வது படம்.. சிபி சக்கிரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்.. முழு விவரம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகிய நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது தன்னுடைய 169 வது படமான ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ராய்,பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகிய சிவராஜ் குமார் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கம்பீரமான தோற்றத்தோடு காணப்பட்டார் இந்தத் திரைப்படத்தின் நடிகர் ரஜினிகாந்த் முதன்மை காவலராக நடித்து வருகிறார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார். இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாட கூடிய ஒரு கமர்சியல் திரைப்படமாக அமைந்தது. இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் முதல் படமாகவும் அமைந்தது. இந்த திரைப்படத்தை எஸ் கே நிறுவனம் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் டான் திரைப்படத்தை தயாரித்தனர்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இவர் அமைத்த பாடல்களும் வெற்றி அடைந்தது.
இதேபோல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அவருடைய 170 ஆவது படத்திலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயார் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது. ஆனாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதே போல் தற்பொழுது இயக்குனர் நெல்சன் உடைய தயாரிப்பில் வெளிவந்த தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமும் ரசிகர்களிடையே சற்று குறைவான வரவேற்பையே பெற்றது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் திரைப்படத்தை கூடுதல் பொறுப்போடு இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

இவற்றை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் நிச்சயமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தையும் சிறப்பாக இயக்கி வெற்றி பெற செய்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரே ஒரு படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தியுடன் நடிகர் ரஜினிகாந்த் இணைய உள்ளார் என்ற செய்தி சில தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும் விமர்சன ரீதியாக பல்வேறு கேலிக்கு உள்ளானது. இந்த நிலையில் ரஜினியின் முடிவு சில தரப்பினருக்கு ஆசிரியத்தையும் அதிர்ச்சியும் தந்துள்ளது.

Most Popular