சினிமா

22 ஆண்டுகளுக்கு பிறகு படையப்பாவுடன் இணையும் நீலாம்பரி

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வரும் இயக்குனர் நெல்சன். தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.இவரது திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜெயில 169 வது படமாகும். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மை ஜெயில் காவலராக நடித்து வருகிறார் அண்மையில் இவர் ஜெயிலர் திரைப்பட சூட்டிங்கிற்காக டெல்லி சென்றதாக தகவல் வெளிவந்தது. இதனால் ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங் தொடங்க இருக்கிறது என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிறது. இதில் டெல்லியில் 10 நாட்கள் ஷூட்டிங் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

Advertisement

இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருமா அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து டான், டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் கதாநாயகியாக இருந்த பிரியங்கா மோகன், எந்திரன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு கதாநாயகியாக இருந்த ஐஸ்வர்யா ராய், படையப்பாவில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், டாக்டர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் காமெடி கேரக்டராகவும் இருந்து ரசிகர்களை ஈர்த்த ரெடின் கிங்ஸ்லே,தரமணி ராக்கி போன்ற படத்தில் நடித்த வசந்த் ரவி போன்றவர்களும் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்திற்கான சூட்டிங்கில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்சிலே மற்றும் வசந்த் ரவி ஆகியோரும் முதல் கட்ட படப்பிடிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . ரஜினிகாந்தின் 169 வது படமான ஜெய்லர் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்க இருப்பதால் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.22 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top