சினிமா

விடுதலை படத்தில் ரஜினி, கமல் மற்றும் தனுஷ் ! வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்

Rajinikanth Kamal Hassan and Dhanush

தமிழ் சினிமாவின் நடப்பு தலைசிறந்த மற்றும் போற்றத்தக்க இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தன் பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் இவர் இதுவரை பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. எடுக்கும் படத்தை தரமாக கொடுப்பதில் மும்முரமாக இருப்பார் வெற்றிமாறன். அவரின் வெற்றிக்கும் இதுதான் முக்கிய காரணம். கல்கி எழுதிய துணைவன் நாவலால் ஈர்க்கப்பட்ட வெற்றிமாறன் கடந்த 15 ஆண்டுகளாக அதை படமாக்க எண்ணினார்.

எல்ரெட் குமார் தயாரிப்பில் அவரின் கனவு நனவாகி வருகிறது. விடுதலை என தலைப்பு கொண்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் சூரியின் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. அடுத்ததாக படத்தின் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement

விடுதலை படத்தின் பாடல்கள் அப்டேட்

தற்போது கிடைத்திருக்கும் சூடான செய்தி என்னவென்றால் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் தனுஷ் ஆகிய மூவரும் பாடியுள்ளதாக செய்திகள் பரவுகின்றன. தனுஷ் பாடியுள்ள பாடல் முதல் சிங்கிளாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பாடிய பாடல்களை ரகசியமாக வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

விடுதலை படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இரண்டு பாகங்களின் ஷூட்டிங்கும் ஒரே நீட்சியாக முடிவடையுள்ளது. ஆரம்பத்தில் 4 கோடி செலவில் திட்டம் செய்யப்பட்ட படம் தற்போது பத்து மடங்கு உயர்ந்து 40 கோடிகளை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி கைதியாகவும் சூரி காவல் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெளியாகியப் பின் சரியான இடைவெளியில் இரண்டாம் பாகமும் வந்துவிடும் என தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top