Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாசிபி சக்ரவர்த்திக்கு டாட்டா ! லவ் டுடே இயக்குனர் பிரதீப்புடன் இணையவுள்ள ரஜினி !

சிபி சக்ரவர்த்திக்கு டாட்டா ! லவ் டுடே இயக்குனர் பிரதீப்புடன் இணையவுள்ள ரஜினி !

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றும் பாலிவுட்டில் கூட ‘தலைவா’ என்று ரசிகர்களால் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை   போற்றி கொண்டாடுவது சற்றும் மிகையாகாது. அனைவரையும் தனது தனித்துவமான உற்சாகமான ஸ்டைலில் அப்படியே என்றும்  இளமை மாறாமல் உற்சாக நடிப்பாலும்  ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்.

- Advertisement -

அவரின் அடுத்த படம் இயக்குனர் நெல்சன்  இயக்கத்தில் ‘ஜெயிலர்’ என்ற படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தை  எடுத்து நடித்துவருகிறார். அந்த படமானது அடுத்த வருடம்  ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதை தொடர்ந்து அவரின் 170 வது படத்தை தன் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஸன்ஸ் தயாரிப்பில்  ‘லால் சலாம்’ என்ற படத்தில்  நடிக்கவிருக்கிறார்.

அதனை தொடர்ந்து தனது 171 வது படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . இந்த படத்தை கோமாளி’, லவ் டுடே போன்ற படங்களை இயக்கிய வெற்றி  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ‘லைக்கா ப்ரொடக்ஸன்ஸ்’ தான் தயாரிக்க உள்ளது.

- Advertisement -

கூடுதல் செய்தியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து  தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்கள்  அதன் இயக்குனர் ‘சிபி சக்கரவர்த்தி’யை அழைத்து  பாராட்டியிருந்தார் . அப்போது அவர்  தான் சூப்பர் ஸ்டாருக்காக ஒரு கதை வைத்திருப்பதாகவும்  அதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார் . இதனை அடுத்து அவரிடம் கதை கேட்ட சூப்பர் ஸ்டாருக்கு  அதன் திரை கதையில்  திருப்தி இல்லை . இந்நிலையில் லவ் டுடே படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார்  அதன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அழைத்து பாராட்டினார்.

- Advertisement -

அப்போது சூப்பர் ஸ்டாருக்காகவே ஒரு கதையை  பிரதீப் ரங்கநாதன் உருவாக்கியுள்ளதை அறிந்து கொண்டார் . மேலும் பிரதீப் ரங்கநாதன் சொன்ன கதையானது  சூப்பர் ஸ்டாருக்கே ஆன ஃபார்முலாவில் உருவாகியுள்ளது  அவரது கவனத்தை ஈர்த்துள்ளது . இதனால் தனது 171 வது படத்தை  பிரதீப் ரங்கநாதனே இயக்க  சம்மதம் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் . தனது மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால்  மிகவும் குஷியில் உள்ளார்  பிரதீப் ரங்கநாதன்.

தற்போது ரிலீசாகியுள்ள  பாபா படம்  எதிர்பார்த்த அளவுக்கு போகாததால்  தான் நடிக்க இருக்கும்  படங்களை  மிகவும் அக்கறையுடன்  சிரத்தை எடுத்து  சூப்பர் ஸ்டார் தேர்வு செய்வதாக  அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular